search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trial"

    • மாற்றுத்திறனாளியை 2-வது திருமணம் செய்து 10 பவுன் நகை-ரூ.8 லட்சம் மோசடி செய்தனர்.
    • போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் கவிதா (வயது 29). மாற்றுத்திறனாளியான இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மேலமங்களத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகவும் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கவிதா சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே திருமணமானதை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு 10 பவுன் நகை ரூ. 8 லட்சம் ரொக்கம் மோசடி செய்து விட்டதாகவும், மேலும் பணம் கேட்டு என்னையும், என் குடும்பத்தினரையும் பாலசுப்பிரமணியன் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து 10 பவுன் நகை, ரூ.8 லட்சம் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட வேலை பார்த்த பெண் தவறி விழுந்து பலியானார்.
    • ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 65). இவர் தனியார் நிறுனத்தில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். அவர் ராஜபாளையத்தில் டிராவல்ஸ் கட்டிட 2-வது மாடியில் பணி செய்த போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அப்ேபாது கீழே செயல்பட்ட புரோட்டா கடை மேற்கூரையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    விருதுநகர்

    விருதுநகர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் செல்வக்கனி (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள வாகன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வக்கனி பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்ன ரெட்டியபட்டி சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி வடிவு (45), கட்டிட வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் வடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் 

    • திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை, மோடி அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை மற்றும் மோடி அரசை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, திருமங்கலம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.

    விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயராம், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கரிசல்பட்டி சவுந்திரபாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் முருகேசன், சங்கன், தளபதி சேகர், பாண்டியன், வீரபுத்தி ரன், உசிலம்பட்டி நகர் தலைவர் மகேந்திரன், துணைத்த லைவர் சரவணன், நகர செயலாளர் ராஜா தேசிங், கவுன்சிலர் அமுதா சரவணன், முன்னாள் நகர் தலைவர் தாமோதரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
    • சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டில் சுமார் 4ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை பொருட்கள் மொத்தமாகவும், சில்லரையிலும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தினசரி ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்லும் கோயம்பேடு மார்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவலின் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் அதேபோல் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்த சந்தை பின்னர் 5 மாத இடை வெளிக்குப் பிறகு படிப்படியாக திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரப்படுத்தியுள்ளது.

    அதன்படி மார்கெட் வளாகத்தில் முககவசம் அணிவது, கடை முன்பு சாணிடைசர் வைப்பது, சமூக இடைவெளி கடை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை வியாபாரிகள் கடை பிடிக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

    மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதையும் தீவிரமாக கண்காணித்து சரி செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கவும் அங்காடி நிர்வாக குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த வாரம் முதல் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடை நடத்தும் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7நாட்களில் இதுவரை 1000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர்.மேலும் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:-

    மார்க்கெட்டில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏராளமான வியாபாரிகள் ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர் மேலும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவ்வாறு ஒத்துழைப்பு தராத, விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டல சுகாதார அதிகாரி கோபால கிருஷ்ணன் கூறும்போது:-

    கோயம்பேடு மார்கெட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா பரிசோதனையை தொடங்கியுள்ளோம் தினசரி 150 முதல் ௨௦௦ பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பூ மார்க்கெட்டில் இருந்து தொடங்கியுள்ள பரிசோதனை வரும் நாட்களில் பழம், காய்கறி மற்றும் மளிகை மார்க்கெட் என விரிவு படுத்தப்படும் என்றார்.

    • சங்கிலியை பறித்தவர் கைதானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக் அலியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல கைலாசநாதபுரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (40). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் புது எல்லிஸ் நகர், காந்திஜி காலனியைச் சேர்ந்த சம்சுதீன் மகன் முபாரக் அலி (24) வெள்ளி சங்கிலி பறித்து தப்ப முயன்றார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக் அலியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே மகன்களை பள்ளியில் சேர்க்க முடியாததால் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள, மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.அவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள, ஒரு அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஜெயச்சந்திரன் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகன்களை, தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாத ஏக்கத்திலிருந்த சுந்தரி,சம்பவத்தன்று, வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சுந்தரி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்த புகாரின்பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் எப்படி இறந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (வயது26) இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.

    இதுபற்றி பிரியங்காவின் தந்தை எஸ்வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக அவர் மர்மமான முறையில் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்கா எப்படி இறந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரியங்கா திருமணமான 6 ஆண்டுகளில் இறந்து விட்டதால் இது தொடர்பாக தேவகோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • உசிலம்பட்டியில் நாய்கள் கடித்து குதறியதில் பலியானது பெண் சிசுவா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • பெண்ணுக்கு பிறந்ததா? அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நேற்று காலை துணியில் சுற்றி போட்ட ஒரு பச்சிளம் குழந்தை நாய்கள் கடித்து குதறியதில் பலியாகி உடல் உடல் சிதைந்து கிடப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சிளங்குழந்தை உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அது ஆண் சிசுவா? பெண் சிசு வா?என்று கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.

    இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோட்டோரம் வீசப்பட்டது பெண் சிசுவா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்தக் குழந்தை திருமணத்திற்கு முன் கர்ப்பமான பெண்ணுக்கு பிறந்ததா? அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் மற்றும் காவலர்கள் சுந்தர், ரமேஷ் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், ஜெயவீரபாண்டியன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான இருவரிடமும் மதுவிலக்கு தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டி யன், தலைமை காவலர் மலையரசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்துவட்டி வழக்கில் பெண் கைதானார்.
    • வாசுகி மீது திருமங்கலம் நகர் போலீசார் கந்து வட்டி வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மலர்க்கண்ணன். இவருடைய மனைவி கோகிலா(வயது42). இவர் திருமங்கலம் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி வாசுகி(52) என்பவரிடம் பிள்ளையின் படிப்பு செலவிற்காகவும், கணவர் மருத்துவ செலவிற்காக ரூ2.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    அதற்கு கோகிலா கடந்த 3 ஆண்டுகளாக வட்டி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது ரூ.9லட்சம் தரவேண்டும் என்றும், தரவில்லை என்றால் வீட்டை எழுதிக்கொடு எனவும் கேட்டு வாசுகி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் கோகிலா புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் வாசுகி மீது திருமங்கலம் நகர் போலீசார், கந்து வட்டி வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.
    • நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

    புதுச்சேரி:

    கோவிந்தசாலை-கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவையில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ரவுடிகள் தங்கள் எதிரிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    மேலும் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தால் கூட ரவுடிகள் அதனை முன் விரோதமாக கருதி எதிராளிகளை கொலை செய்து வருகின்றனர்.

    குறிப்பாக ரவுடிகள் சிறு வயது இளைஞர்களை தங்களது கூட்டாளிகளாக மாற்றி அவர்களுக்கு மது, கஞ்சா போன்றவற்றை வழங்கி அவர்கள் மூலம் வஞ்சம் தீர்த்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அத்திபூத்தாற் போன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்து வந்த நிலையில் தற்போது வெடிகுண்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.

    நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

    மாலைப் பொழுதில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த புதுவை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ரவுடிகளை கைது செய்தாலும் புதிது, புதிதாக ரவுடிகள் உருவாகிறார்கள்.

    அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடை விதிக்கப்பட்டாலும் ஒரு சில நாட்கள் மட்டும் ரவுடிகள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டு மீண்டும் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

    இந்த நிலையில் கண்டாக்டர் தோட்டம், கோவிந்தசாலை மற்றும் டி.வி. நகர் பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் தங்கி இருப்பதாக தகவல் வந்ததின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுபம்கோஷ், வம்சித ரெட்டி ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் மற்றும் பெரியக்கடை, ஒதியஞ்சாலை போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை 2 மணி நேரம் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 6 ரவுடிகள் போலீசாரின் சோதனையில் சிக்கினர். மேலும் ஒரு ரவுடியின் வீட்டில் சாராயமும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த ரவுடியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். அதே வேளையில் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் சிக்கவில்லை. போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் மற்ற ரவுடிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ×