நாய்கள் கடித்து குதறியதில் பலியான பெண் சிசுவா?

உசிலம்பட்டியில் நாய்கள் கடித்து குதறியதில் பலியானது பெண் சிசுவா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பெண்ணுக்கு பிறந்ததா? அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நாய்கள் கடித்து குதறியதில் பலியான பெண் சிசுவா?
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நேற்று காலை துணியில் சுற்றி போட்ட ஒரு பச்சிளம் குழந்தை நாய்கள் கடித்து குதறியதில் பலியாகி உடல் உடல் சிதைந்து கிடப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சிளங்குழந்தை உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அது ஆண் சிசுவா? பெண் சிசு வா?என்று கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோட்டோரம் வீசப்பட்டது பெண் சிசுவா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்தக் குழந்தை திருமணத்திற்கு முன் கர்ப்பமான பெண்ணுக்கு பிறந்ததா? அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com