என் மலர்

  புதுச்சேரி

  புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
  X

  புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.
  • நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

  புதுச்சேரி:

  கோவிந்தசாலை-கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

  புதுவையில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ரவுடிகள் தங்கள் எதிரிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

  மேலும் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தால் கூட ரவுடிகள் அதனை முன் விரோதமாக கருதி எதிராளிகளை கொலை செய்து வருகின்றனர்.

  குறிப்பாக ரவுடிகள் சிறு வயது இளைஞர்களை தங்களது கூட்டாளிகளாக மாற்றி அவர்களுக்கு மது, கஞ்சா போன்றவற்றை வழங்கி அவர்கள் மூலம் வஞ்சம் தீர்த்து வருகின்றனர்.

  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அத்திபூத்தாற் போன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்து வந்த நிலையில் தற்போது வெடிகுண்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

  சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.

  நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

  மாலைப் பொழுதில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த புதுவை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ரவுடிகளை கைது செய்தாலும் புதிது, புதிதாக ரவுடிகள் உருவாகிறார்கள்.

  அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடை விதிக்கப்பட்டாலும் ஒரு சில நாட்கள் மட்டும் ரவுடிகள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டு மீண்டும் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

  இந்த நிலையில் கண்டாக்டர் தோட்டம், கோவிந்தசாலை மற்றும் டி.வி. நகர் பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் தங்கி இருப்பதாக தகவல் வந்ததின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுபம்கோஷ், வம்சித ரெட்டி ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் மற்றும் பெரியக்கடை, ஒதியஞ்சாலை போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை 2 மணி நேரம் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது 6 ரவுடிகள் போலீசாரின் சோதனையில் சிக்கினர். மேலும் ஒரு ரவுடியின் வீட்டில் சாராயமும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து அந்த ரவுடியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். அதே வேளையில் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் சிக்கவில்லை. போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் மற்ற ரவுடிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

  Next Story
  ×