search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic congestion"

    • லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
    • அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை, ஆடலூர், பெரியூர், பாச்சலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கே.சி.பட்டி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் கே.சி.பட்டி பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடும் அவதி
    • சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் மிக முக்கியமான சாலையாக, காந்தி ரோடு உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டும் செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று காலை 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் காந்தி ரோட்டை ஆக்கிரமித்து நின்றது. வழிமறித்தபடி நின்று கொண்டிருந்த கனரக வாகனங்களை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    காலை நேரத்தில் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றதால், காந்தி ரோட்டில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், காந்தி ரோட்டில் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர்.
    • அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஒன்று கூடுவர். தினமும் காலையில் 7 மணியிலிருந்து வரத் தொடங்குவர். 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர். இதில் அதிகளவில் கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் இருப்பர். இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பணி வழங்குவார்கள்.

    இது தவிர வீடு சுத்தம் செய்தல், தோட்டங்களை பராமரிளத்தல் போன்ற வேலைகளுக்கும் பொதுமக்கள் இங்கு வந்து பணியாளர்களை அழைத்து செல்வர். இவர்களுக்கு என்று நிரந்தர பணி இல்லாவிட்டாலும், இங்கு வந்து நின்றால் வேலை நிச்சயமாக கிடைக்கும். இந்நிலையில் மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதாலும், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்று காலை 7.30 மணிக்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    எங்களை வேலைக்கு அழைப்பவர்கள் காலங்காலமாக இங்கு வந்துதான் எங்களை அழைத்து செல்கின்றனர். அதனால் இங்கு நின்றால் மட்டுமே வேலை கிடைக்கும். கலைந்து சென்றால் எங்களுக்கு வேலை கிடைக்காமல், எங்கள் குடும்பம் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்படும் என கூறினர். இதையடுத்து மும்முனை சந்திப்பில் உள்ள பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர். இதனையேற்ற கூலித் தொழிலாளர்கள் அங்கிருந்து 500 மீட்டர் தள்ளி சென்று நின்றனர். இதனால் இன்று காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை பாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே பரபரப்பு நிலவியது.

    • தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது.
    • ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரின் மையப்பகுதி டவுன்ஹால் ஆகும். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தாமஸ் வீதி, ராஜவீதி, ரங்கே கவுடா் வீதி, இடையர் வீதி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் டவுன்ஹால் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய சாலைகள் அனைத்திலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மளிகை சாமான்கள், இஞ்சி, பூண்டு போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் இப்பகுதியில் உள்ளது. அத்தகைய கடைகளுக்கு ராஜவீதி வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    மேலும் நகைக்கடைகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. எனவே ராஜவீதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக காணப்படும். சரக்கு ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் ,நான்கு சக்கர வாகனங்களும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை இங்கு காண முடிகிறது.

    இதற்கிடையில் தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது. நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவையின் முக்கியமான பகுதி இப்பகுதி ஆகும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ராஜவீதியை பொறுத்த அளவு சற்று அகலமான சாலை தான். ஆனாலும் சாலைகளின் 2 புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால்தான் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சாலையின் ஒரு புறம் மட்டுமே பார்க்கிங் என்ற முறை அமலுக்கு வந்தால் போக்கு வரத்து நெருக்கடியை தவிர்க்க முடியும்.

    மேலும் சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் ராஜவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் .

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • பின்னர் பணி தொடங்கப்படும்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் கால்நடை மருத்துவமனை அருகே பெங்களூரு சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பெங்களூரு சாலை மாங்காய் மண்டி அருகே கழிவுநீர் கால்வாய் சிறுபாலம் சேதமடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களும் குறுகலான சிறுபா லத்தின் வழியாக செல்கிறது. சில நேரங்களில் குப்பைகள் அதில் அடைத்துவிடுவதால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு வேறு பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் சிறுபாலத்தின் வழியாக குடிநீர் குழாய் மாற்றப்பட வேண்டும். அதை அகற்றுவது தொடர்பாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

    அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறி யாளர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். குழாய்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
    • உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் 108 ஆம்புலன்ஸ். கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாசலம் ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள், செல்வோர் என பொதுமக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். திட்டக்குடி நகராட்சியில் மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.

    மேலும் அன்றாடம் விபத்துகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்வது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சாலையில் வரும் பொழுது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    திட்டக்குடியில் போக்குவரத்து காவலர்கள் நியமனம் தேவை என கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமன செய்து திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்தினால் ஓரளவு விபத்துக்கள் குறையும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

    மேலும் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக செட் அமைப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் நகராட்சி விருப்பத்தின்படி இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக அலட்சியமாக செயல்படுவதால் இதில் பாதிக்கப்படுவது அன்றாடம் பஸ்சில் பயணம் செய்யும் தொழிலாளர்கள், சிறு குரு விவசாயிகள், சிறுகுரு வணிகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதை விரைந்து முடிக்க வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். வீரபாண்டி பிரிவில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சாலை குறுகலாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் வீரபாண்டி பிரிவு நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 150 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் முதல் 4மீட்டர் அகலத்திற்கு 95லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு சாலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறு தரப்பினரும் கடும் மனஉளைச்சலுக்கு அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வீரபாண்டி பிரிவில் பேருந்துகள் நிறுத்தத்திற்கு ஒதுக்கிய இடத்திலும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    மேலும் இந்த வழியாக தினந்தோறும் கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் பயணம் செய்கிறார்கள்.மேலும் வீரபாண்டி பிரிவில் தான் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகன சோதனை சாவடி மையமும் இருக்கிறது. ஆனால் ஆக்கிரமிப்பு அதிகாரித்து கொண்ட வருகின்றன. இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்று இணைந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
    • தியாகராயா சாலையில் ஒருமணி நேரத்துக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் வாகனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசல் பெருகி வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் வணிகப்ப குதிகளில் முக்கியமான சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே இதை முறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 80 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள தியாகராயா சாலையில் ஒருமணி நேரத்துக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தி.நகரில் உள்ள பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5-ம், கார்களுக்கு ரூ.20-ம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை சென்னை மாநகராட்சியின் ஜிசிசி ஸ்மார்ட் பார்க்கிங் என்னும் செயலி மூலம் செலுத்தலாம்.

    • வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் பல்வேறு விதமான தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு விதமான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நகரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. ஆனால் பிரதான சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் அதற்கு காரணமாகும். குறிப்பாக சத்திரம் வீதியில் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படுகிறது. அதே போன்று வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இது போன்ற பல்வேறு காரணங்களால் உடுமலை பகுதி பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.மேலும் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகரப் பகுதிக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகரப் பகுதிக்குள் பிரதான சாலைகளில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் கனரக வாகனங்களை பகல் நேரத்தில் பிரதான சாலைகளில் நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
    • பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சரிவர திட்டமிடாமல் கட்டப்பட்டதன் விளைவாக பெருமாள் கோவில் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெருமாள் கோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து திரும்பும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தனியார் ஸ்வீட்ஸ் கடை எதிரில் பாலத்துக்கு கீழ் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம்.

    மேலும் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பதாகை வைத்துள்ளது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    வேலூர்:

    வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இதில் மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட பகுதி கள், பழைய நகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகு திகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த நிலையில் சாலைகள் குண் டும், குழியுமாக உள்ளன.

    இதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகி தப்பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட் டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டத்தின் பிரதான குழாய் இணைப்பு ஆற்காடு சாலையில் வருவதால் ஆற்காடு சாலையிலும் பாதாள சாக்கடை திட் டப்பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங் கும் பணியும் நடந்தது.

    இப்பணிகளால் சைதாப்பேட்டை முரு கன் கோவில் தொடங்கி சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் நெடுஞ்சாலை இணைப்பு வரை போக் குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது.

    இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முருகன் கோவில் அருகில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    சாலையில் வரும் வாகனங்கள் எதிர் எதிரே வருவதால் காகிதப்பட்டறையில் ஆற்காடு சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனைத் தவிர்க்க இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • கடந்த 2 நாட்களாக சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    ×