கே.சி.பட்டியில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி

லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை, ஆடலூர், பெரியூர், பாச்சலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கே.சி.பட்டி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் கே.சி.பட்டி பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com