என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.2 கோடியில் சிறுபாலம் அமைக்க நடவடிக்கை
- பின்னர் பணி தொடங்கப்படும்
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் கால்நடை மருத்துவமனை அருகே பெங்களூரு சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெங்களூரு சாலை மாங்காய் மண்டி அருகே கழிவுநீர் கால்வாய் சிறுபாலம் சேதமடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களும் குறுகலான சிறுபா லத்தின் வழியாக செல்கிறது. சில நேரங்களில் குப்பைகள் அதில் அடைத்துவிடுவதால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
அந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு வேறு பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் சிறுபாலத்தின் வழியாக குடிநீர் குழாய் மாற்றப்பட வேண்டும். அதை அகற்றுவது தொடர்பாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறி யாளர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். குழாய்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.






