search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் தவிப்பு"

    • இன்று ஒரே வழித்தடத்தில் இயங்கக்கூடிய 2 நகரப்புற பஸ்கள் இயங்கவில்லை.
    • பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனை யில் தினமும் 82 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகர புற பஸ்கள் 23, புறநகர் பஸ்கள் 59 இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஒரே வழி த்தடத்தில் இயங்கக்கூடிய கே.3, பி.13 என்ற நகரப்புற பஸ்கள் இயங்கவில்லை.

    இந்த பஸ் கோவிலூர், எண்ணமங்கலம், கவுந்தப்பாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும்.

    இந்த நிலையில் 2 பஸ்களும் காலை முதல் இயங்காதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    இந்த வழித்தடத்தில் மட்டும் அடிக்கடி பஸ் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் முக்கிய நாட்களில், விசேஷ நாட்களில் இது போன்று பஸ்கள் வராமல் செய்வது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

    இது குறித்து கிளை மேலாளர் தெரிவிக்கையில், அந்தியூர் அரசு பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    • அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது.
    • அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் 10-வது வார்டு பகுதியில் சாலை, மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா சாலை பஸ் நிலையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கே குடிநீர் விநியோ கம் கடந்த 3 மாதங்களாக வருவதில்லை எனவும், இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் 11-வது வார்டு பகுதிக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து பருகும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு வண்டி தண்ணீர் வாங்கி பயன்படு த்தி வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மட்டுமின்றி பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகளும் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    எனவே உடனடியாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.
    • இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி க்குட்பட்ட தாசமநாய க்கன்பட்டி, வைரபெருமாள் பிள்ளையூர், மணல்காட்டூர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. சின்னழகுநாயக்க னூர் அருகே மணல் காட்டூர் - தாசமநாயக்கன்பட்டி செல்லும் சாலை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு உருக்குலைந்து போக்கு வரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்க ப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணல்காட்டூர், வைரபெருமாள் பிள்ளை யூர், தாசமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்த ப்படவில்லை. எனவே விரைவில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். உரிய நட வடிக்கை எடுக்காதபட்ச த்தில் பொதுமக்களுடன் சேர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிடுவோம் என அவர்கள் தெரி வித்தனர்.

    • தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    பெய்ஜிங்:

    இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பஅலை தாக்கி வருகிறது.

    இதன் காரணமாக இத்தாலியில் 114.8 டிகிரி வெயிலும், ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இதில் உச்சகட்டமாக சீனாவில் வரலாறு காரணாத வகையில் 125.6 டிகிரி வெயில் போட்டு தாக்குகிறது. 100 டிகிரி அடித்தாலே பொதுமக்கள் வாடி வதங்கி விடுவார்கள். ஆனால் இதை விஞ்சும் வகையில் வெப்ப அலை அதிகமாக வீசுவதால் சீன மக்கள் தவித்து வருகின்றனர்.

    தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேலாக இந்த பகுதிகளில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இன்னும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பஅலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சீனாவில் கடந்த 1961-ம் ஆண்டு கடும் வெப்ப அலை ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது அங்கு வெப்ப அலை பொதுமக்களை பாடாய் படுத்துகிறது. வெப்பத்தால் இரவு நேரம் கடும் புழுக்கமாக இருக்கிறது.இதனால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலைக்கு ஏராளமானோர் அம்மை, சிறுநீர் கடுப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.நோயாளிகள், முதியவர்கள் வெப்ப அலையால் தாக்குபிடிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்,

    இத்தாலியில் ரோம், சிசிலி உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் 46 நகரங்களில் 120 டிகிரி வெயில் அடிக்கிறது.

    வெப்பஅலையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 112 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் அனலால் காடுகளில்வேகமாக தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
    • உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் 108 ஆம்புலன்ஸ். கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாசலம் ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள், செல்வோர் என பொதுமக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். திட்டக்குடி நகராட்சியில் மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.

    மேலும் அன்றாடம் விபத்துகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்வது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சாலையில் வரும் பொழுது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    திட்டக்குடியில் போக்குவரத்து காவலர்கள் நியமனம் தேவை என கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமன செய்து திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்தினால் ஓரளவு விபத்துக்கள் குறையும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

    மேலும் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக செட் அமைப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் நகராட்சி விருப்பத்தின்படி இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக அலட்சியமாக செயல்படுவதால் இதில் பாதிக்கப்படுவது அன்றாடம் பஸ்சில் பயணம் செய்யும் தொழிலாளர்கள், சிறு குரு விவசாயிகள், சிறுகுரு வணிகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதை விரைந்து முடிக்க வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறை மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பார்கள்.

    குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரே நேரடியாக மனுக்களை பெறுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.இதன்காரணமாக அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்களின் கூட்டம அலைமோதும்.

    அதன்படி திங்கட்கிழமையான இன்று மனு அளிக்க காலை முதலே முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக் கானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் இன்று காலை அரசு அலுவல் காரணமாக கலெக்டர் வெளியே சென்று விட்டார். ஆனால் பொதுமக்களிடம் மனுக்களை பெற எந்தவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    கலெக்டர் இல்லாதபோது அதற்கு அடுத்த தகுதியில் உள்ள அதிகாரிகள் முகாமை நடத்தி மனுக்களை பெறுவது வழக்கம். ஆனால் இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    • மேலும் இந்த பகுதியில் உள்ள 2 குறுக்கு தெருவில் தார் சாலை மற்றும் வடிகால் வசதி செய்யாமல் அந்த தெரு மக்கள் சென்று வர வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
    • இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி 13-வார்டு முனியப்பன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கடந்த ஆண்டு தருமபுரி நகராட்சியால் பணிகள் தொடங்கப்பட்டது.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தார் சாலைமற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் 10 சிறிய குறுக்கு தெருவில் தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்,மின் இணைப்பு பணிகள் செய்யப்பட்டன.இந்த பணிகளை பத்து மாதம் கடந்தும் முடிக்கவில்லை.முறையாக பணிகள் முடிக்காததால் சாக்கடை நீர் தேங்குகிறது.

    மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது.ஆனால் மின் இணைப்பு தராமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

    மேலும் இந்த பகுதியில் உள்ள 2 குறுக்கு தெருவில் தார் சாலை மற்றும் வடிகால் வசதி செய்யாமல் அந்த தெரு மக்கள் சென்று வர வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

    எனவே மேற்கண்ட குறைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×