மின் கம்பம் இருக்கு-மின் இணைப்பு இல்லை: தருமபுரி நகராட்சி 13-வார்டு முனியப்பன் கோவில் தெரு பொதுமக்கள் தவிப்பு

மேலும் இந்த பகுதியில் உள்ள 2 குறுக்கு தெருவில் தார் சாலை மற்றும் வடிகால் வசதி செய்யாமல் அந்த தெரு மக்கள் சென்று வர வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.
மின் கம்பம் இருக்கு-மின் இணைப்பு இல்லை: தருமபுரி நகராட்சி 13-வார்டு முனியப்பன் கோவில் தெரு பொதுமக்கள் தவிப்பு
Published on

தருமபுரி,

தருமபுரி நகராட்சி 13-வார்டு முனியப்பன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கடந்த ஆண்டு தருமபுரி நகராட்சியால் பணிகள் தொடங்கப்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தார் சாலைமற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் 10 சிறிய குறுக்கு தெருவில் தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்,மின் இணைப்பு பணிகள் செய்யப்பட்டன.இந்த பணிகளை பத்து மாதம் கடந்தும் முடிக்கவில்லை.முறையாக பணிகள் முடிக்காததால் சாக்கடை நீர் தேங்குகிறது.

மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது.ஆனால் மின் இணைப்பு தராமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

மேலும் இந்த பகுதியில் உள்ள 2 குறுக்கு தெருவில் தார் சாலை மற்றும் வடிகால் வசதி செய்யாமல் அந்த தெரு மக்கள் சென்று வர வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

எனவே மேற்கண்ட குறைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com