search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People are suffering"

    • அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது.
    • அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் 10-வது வார்டு பகுதியில் சாலை, மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா சாலை பஸ் நிலையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கே குடிநீர் விநியோ கம் கடந்த 3 மாதங்களாக வருவதில்லை எனவும், இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் 11-வது வார்டு பகுதிக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து பருகும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு வண்டி தண்ணீர் வாங்கி பயன்படு த்தி வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மட்டுமின்றி பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகளும் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    எனவே உடனடியாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு நிலக்கோட்டை, திண்டுக்கல் அரசு பஸ் கடந்த 2 மாதங்களாக சரிவராததால் மாணவ -மாணவி கள் மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டுக்கு வரும விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர்.
    • கடந்த ஆண்டுகளில் வந்த அந்த அத்தனை பஸ்களும் சரியான நேரத்திற்கும் வருவதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும், மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வுக்கு உட்பட்ட அணை ப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார் பட்டி, பள்ள ப்பட்டி, தோப்புப்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திண்டுக்கல்லில் படிப்ப தற்காக மாணவ மாணவிகள் கல்லூரிக்கும் பள்ளி களுக்கும் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

    அவ்வாறு வரும் மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு நிலக்கோட்டை, திண்டுக்கல் அரசு பஸ் கடந்த 2 மாதங்களாக சரிவர வருவதில்லை. இதன் காரணமாக மாணவ மாணவி கள் பாதிக்கப்படு கின்றனர். அதேபோன்று நிலக்கோட்டையில் இருந்த திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டுக்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பஸ்ஸில் சென்று வருவது வழக்கம்.

    நிலக்கோட்டையை பொறுத்தவரை குறைந்த அளவே திண்டுக்கல் பஸ்கள் உள்ளன. இந்தக் குறைந்த அளவு பஸ்கள் கூட கடந்த 2 மாதங்களாக சரிவர வருவதில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    காலை நேரத்தில் அரசு பஸ் வராத காரணத்தால் தனியார் பஸ்களில் ஏறு வதற்கு ஒருவருக்கொருவர் மல்லு கட்டி சண்டை போடுவது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாக மாறி வருகிறது. எனவே கடந்த ஆண்டுகளில் வந்த அந்த அத்தனை பஸ்களும் சரியான நேரத்திற்கும் வருவதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும், மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு மகளிருக்கு இலவச பஸ் இயக்கப்படுவதால்தான் இப்படி பஸ்களை குறைந்த அளவில் அனுப்புகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும் போக்குவரத்துக் கழகத்தில் ஏராளமான காலியிடங்கள் இருப்பதால் பல இடங்க ளுக்கு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.

    இதுகுறித்து சிலுக்கு வார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜாராம் கூறிய தாவது:-

    திண்டு க்கல்லுக்கு தினந்தோ றும் பஸ் இயக்கு வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இதனை உரிய முறையில் ஆய்வு செய்து ஏற்கனவே விடப்பட்ட பஸ்கள் சரியான நேரத்தில் வருவதற்கும், அதே சமயம் தற்சமயம் மக்கள் தொகை கூடியுள்ள நிலையில் அதற்கு தகுந்தாற்போல் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

    • பொதுமக்கள் பஸ்சை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
    • இன்று அந்த பஸ் வரவில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 84 பஸ்களில், 62 பஸ் புறநகர பேருந்தாக மதுரை, நாகர்கோயில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயங்கி வருகிறது. மேலும் 22 பஸ்கள் டவுன் பஸ் ஆக கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் அவ்வப்போது வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு பஸ்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதில் குறிப்பாக அந்தியூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம பகுதிக்கு செல்லக்கூடிய பி 13 என்ற டவுன் பஸ், எண்ணமங்கலம், கோயிலூர் வரையில் சென்று வரும் பஸ்சில் பள்ளி நாட்களில் அந்த பகுதியில் இருந்து அந்தியூர் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    மேலும் விசேஷ நாட்களில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பஸ்சை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் அதிகளவில் அந்த பகுதி மக்கள் இந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், இன்று அந்த பஸ் வரவில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.

    மேலும் கடந்த வாரம் மதியம் 1.40 மணி அளவில் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு செல்லக்கூடிய புறநகர் பஸ் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தார்கள். பஸ் புறப்படும் நேரம் ஆகியும் புறப்படவில்லை.

    டிரைவர் வந்தும் நடத்துனர் இல்லாததால் பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளையும் கீழே இறங்கி மாற்று பஸ்சிற்கு அனைவரையும் போக சொல்லி கூறினர்.

    இதனையடுத்து பஸ்சில் அமர்ந்திருந்தவர்கள் மாற்று பஸ்சில் சீட்டு கிடைக்குமோ, கிடைக்காதா என்று முந்தி அடித்துக்கொண்டு சென்று பஸ்சில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே வரும் காலங்களில் அந்தியூர் பணிமனையில் இதுபோன்று நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், பஸ் பயணிகள் கேட்டுக்கொ ண்டுள்ளனர்.

    • அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

    ஆனால் அதன் பிறகு அக்னி நட்சத்திர வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 11 மணி முதல் மதியம் 5 மணி வரை வெயிலில் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இவர்கள் எப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி கொண்டே தான் இருக்கிறது.

    எனினும் வெப்பம் காரணமாக புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக உடலில் நீர் சத்து குறைந்து தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் அதிகரித்து வருகிறது. எனவே நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதுபோக மோர், இளநீர், அதிக அளவில் பருகலாம் எனவும் இதனால் நீர் சத்து கிடைக்கும் இடமும் மதித்து உள்ளனர்.

    நொங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காயும் உடலுக்கு இதமானது என அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஈரோட்டில் சராசரியாக 102 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் விடைபெறுகிறது. அதுவரை சமாளித்து தான் ஆக வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

    • காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது.
    • மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி வந்தனர்.

    இந்நிலையில் கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, கொடு முடி போன்ற புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதி களிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட த்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய பிறகு ஓரளவு மழை பெய்ததால் வெப்பம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.

    காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    இந்த நேரத்தில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் புழுக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மோர், இளநீர், கரும்பு பால் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரமும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    வெயில் அதிகமாகி உள்ளதால் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் அதிக அளவில் வருகிறது. உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    முடிந்த அளவு குழந்தைகள், முதிய வர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    எனினும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எப்போது அக்னி நட்சத்திரம் வெயில் முடியும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிரு க்கின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இளநீர், கரும்பு ஆகியவற்றை விரும்பி அருந்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பொதுவாக மே மாதம் தொடக்கத்திலிருந்து கடைசி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.

    ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தை தொடுகிறது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

    அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பேன் இயங்கி கொண்டே இருக்கி றது.

    மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.

    வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இளநீர், கரும்பு ஆகியவற்றை விரும்பி அருந்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக இளநீர் கரும்பு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நீர்ச்சத்து நிரம்பியுள்ளதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும் என்ப தால் தர்பூசணி வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.

    தற்போது மார்ச் மாதம் தான் தொடங்கியுள்ளது இப்போதே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வரும் மே மாதம் தொடக்கத்தில் அக்னி நட்சத்திர வெயில் வர இருக்கிறது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும். 

    • டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
    • தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி, கவுண்டம் பாளைம் கிராமம், கொன்னக்கொடி கால் என்ற பகுதியில் சுமார் 70 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே மேடான சாலையோர பகுதிக்கு வந்தனர்.

    தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மழைநீர் வெள்ளத்தால் சில ஆடுகள் இறந்து விட்டதாகவும், வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேலும், வீடுகளுக்குள் புகுந்து மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
    • வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள்.

     அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் காலை முதல் மாலை வரை நாங்கள் பல ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றோம். ஆனால் எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் இல்லை. வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள். நாங்கள் எங்கே போவோம் என தெரிவித்தனர்.

    ×