என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி
- பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
- வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள்.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் காலை முதல் மாலை வரை நாங்கள் பல ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றோம். ஆனால் எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் இல்லை. வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள். நாங்கள் எங்கே போவோம் என தெரிவித்தனர்.
Next Story






