search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur district"

    • அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி( வியாழக்கிழமை ) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வரும் செப்டம்பா் 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும். திருப்பூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை .
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் தெக்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபாளையம், சென்னியாண்டவா் கோயில், வினோபா நகா், விராலிகாடு, ராயா்பாளையம், தண்ணீா்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்காட்டுப்பாளையம், சேவூா், குளத்துப்பாளையம், வளையபாளையம். காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகலில் நாளை 22-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டுவலசு.பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு, சேவூா், வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    சேவூா் துணை மின் நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா்,போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், மாரப்பம்பாளையம்.வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும். 

    • சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1341 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் 31 ஆயிரத்து 728 சிறார்கள், 42 ஆயிரத்து 300 இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 என மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு 2-வது தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் முகாமில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது கொரோனா தடுப்பூசி 2-வது தவணை பெற்று 6 மாதம் அல்லது 28 வாரங்கள் நிறைவடைந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    • இருபாலருக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
    • பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் இளைஞா் திறன் திருவிழா நாளை 18-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்பற வாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்பூா் மாவட்டம் சாா்பில் வட்டம் வாரியாக இளைஞா் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதில் கிராமப்புற பகுதியில் உள்ள 18 வயது முதல் 35 வயதுடைய 10, பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் தவறிய ஆண், பெண் இருபாலருக்கும் அரசுத் துறை மற்றும் தனியாா் துறை நிறுவனங்களை கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதில் கைப்பேசி ஹாா்டுவோ் பழுதுபாா்ப்பவா், சிஎன்சி ஆபரேட்டா், தையல் எந்திரம் இயக்குபவா், மொ்சன்டைஸா், வெல்டிங், பேஷன் டிசைனிங், காளான் வளா்ப்பு, மகளிா் டெய்லா், சணல் பை தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, அலங்கார நகைகள் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

    அதேபோல, தீன்தயாள் உபத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின்கீழ் திறன் பயிற்சியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் திறன் பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, புத்தகம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தபின் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன், சுய தொழில் பயிற்சி முடிக்கும் இளைஞா்களுக்கு தொழில் தொடங்கி கடன் உதவி ஏற்பாடு செய்து தரப்படும்.

    ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரை 94440-94396 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞா் திறன் திருவிழா நடைபெறும் இடங்கள்: திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நாளை 18-ந் தேதியும், வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 26ந் தேதியும், தாராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 27-ந் தேதியும், குண்டடம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 2ந் தேதியும், பெதப்பம்பட்டி என்.வி.பாலிடெக்னிக் கல்லூரியில் செப்டம்பா் 3-ந்தேதியும் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 9-ந் தேதியும், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 17ந்தேதியும், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 24ந்தேதியும் திறன் திருவிழா நடைபெறுகிறது.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கூட்டம் நடத்துவதற்கான செலவு தொகையை ரூ.1000த்தில் இருந்து ரூ.5000மாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சியின் 1.4.2022 முதல் 31.7.2022 முடியவுள்ள காலாண்டின் வரவு செலவு விபரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகை வைக்கப்பட்டது. மேலும், கிராம சபையில் வரவு செலவுக் கணக்குகள் ஒப்புதல் பெறப்பட்டது.

    தமிழக அரசால் 15.8.2022 முதல் 2.10.2022 வரை தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு எழில் மிகு கிராமம்" என்ற சிறப்பு பிரச்சாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்து செயல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2 திட்டத்தின் கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010-க்கு பின்னர் புதிய குடிசைகள் அமைத்துள்ளோர் விவரம் குக்கிராமம் வாரியாக கணக்கெடுத்தல், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடையும் வகையும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும், பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்களைப் பற்றி விளக்கினார்கள். மேலும், ஊத்துக்குளி வட்டாரம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். திருப்பூர் வட்டாரம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மா வட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்-திட்ட இயக்குநர் கலந்து கொண்டார். 

    • மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சா, மோட்டார் சைக்கிள், பணம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அவரது உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் அவிநாசி, மங்கலம், உடுமலை, குடிமங்கலம், ஊத்துக்குளி போன்ற போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தணிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வியாபாரிகள் விஜயயானி, பிண்டுகுமார், ஜெகநாத், ஜெயக்குமார், பாலாஜி, செல்வகுமார், ரபிகுல்லாஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, மோட்டார் சைக்கிள், பணம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • திருப்பூர் மாவட்டமும் விருது மற்றும் பாராட்டு சான்று பெற தேர்வானது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விருது மற்றும் சான்றை கொடுத்து வாழ்த்து பெற்றார்கள்.

    திருப்பூர்:

    உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையகத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் ஆய்வு, மாதிரிகள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 'ஈட் ரைட் சேலஞ்ச்' விருதுக்கு தேசிய அளவில் 75 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டமும் விருது மற்றும் பாராட்டு சான்று பெற தேர்வானது.

    இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் விருது மற்றும் பாராட்டு சான்றை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகையிடம் வழங்கி பாராட்டினார். பின்னர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விருது மற்றும் சான்றை கொடுத்து வாழ்த்து பெற்றார்கள்.

    • ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பணியாளர், புதிய பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    மக்கள் நலப்பணியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு, வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 50 வயதுக்கு உட்பட்ட, கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள புத்தக காப்பாளர், சமுதாய வல்லுனர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோருக்கு இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர், பணி ஒருங்கிணைப்பாளராக விண்ணப்பிக்கும் போது 'முந்தைய மக்கள் நலப்பணியாளர் பணிக்கான, பணிக்கால உரிமை மற்றும் முந்தைய பணிக்கால உரிமை தொகை ஏதும் கோரமாட்டேன் என்ற சம்மத கடிதம் பெற்ற பிறகு பணியில் அமர்த்த பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பழைய மக்கள் நலப்பணியாளர் விவரம் நிபந்தனைக்கு உட்பட்டு தற்போது பணியில் ஈடுபடுவது, சம்மத கடிதம் அளிப்பது போன்ற பணிகளை கவனிக்க, ஒன்றியம் தோறும் உதவி இயக்குனர் நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பணியாளர், புதிய பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே6,000 ரூபாய் மாத சம்பளத்தில் பணியாற்றினோம்.மக்கள் நல பணியாளருக்கு மட்டும் 7,500 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். புதிய பணியில் சேரவே விரும்புகிறோம். பணியில் இணைந்த போது தேவையான கோரிக்கையை முதல்வரிடம் முன்வைப்போம் என்றார்.

    • 63 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 603 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
    • வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 2,681 இடங்களில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில்12 - 14 வயதினர், 15-18 வயதினர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 21 லட்சத்து, 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரத்து 528 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து, 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 63 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 603 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. நாளை 12-ந் தேதி 30வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.மருத்துவ கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 2,681 இடங்களில் முகாம் நடக்கிறது.

    ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் தடுப்பூசி கிடைக்க, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.முகாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதம் அல்லது 39 வாரம் கடந்த சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.பல்வேறு துறைகளை சேர்ந்த 5,362 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நாளை நடக்கும் முகாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் கடந்த வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுவரை முகாமில், 18 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று நடக்கும் முகாமில், 15 - 18 வயது பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தடுப்பூசி முகாமில் மக்கள் பயன்பெற ஏதுவாக முகாம் நடக்கும் நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை, 7 மணி முதல், இரவு 7 மணி வரை மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

    சுகாதாரத்துறை மூலம் வாராந்திர முகாம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதாந்திர மெகா முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த, 8-ந் தேதிக்கு பின் ஐந்து வாரங்களாக முகாம் நடக்காத நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை வசம் 4.40 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும்.

    திருப்பூர்:

    வரும் கல்வியாண்டில் 164 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, சமக்ர சிக் ஷா திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள164 அரசு உயர்நிலை பள்ளிகளின் விபரங்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் பிச்சம்பாளையம் புதூர், பாண்டியன் நகர், நெசவாளர் காலனி, முதலிபாளையம், கருவம்பாளையம், காரணம்பேட்டை, பூலுவப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள 7 உயர்நிலைப்பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

    இந்த பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்தாண்டு பிளஸ் -1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட அரசு பள்ளிகளை விட இந்த ஆண்டில் கூடுதலாக, 7 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும். மற்ற பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் அடிப்படையில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.



    தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். #Plus2Result #Plus2Exam #TNResults
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இன்று வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார். #FinalVotersList
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இன்று வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார். அதை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ‌ஷரவன் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவினாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 8 தொகுதிகளிலும் 11 லட்சத்து 60 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 8 ஆயிரத்து 617 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 244 வாக்காளர்களும் என மொத்தம் 22 லட்சத்து 8 ஆயிரத்து 921 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 2482 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. #FinalVotersList
    ×