search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "topped"

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.



    தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். #Plus2Result #Plus2Exam #TNResults
    கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. #Domestic #ForeignVist #Tourist
    சென்னை:

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உலகின் பழமையான கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.

    எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சுற்றுலாச் சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாடு, கடந்த 2017-ம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றது.

    இதை மத்திய அரசின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்று வந்துள்ளது.

    2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

    2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. இந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையர் பழனிக்குமார் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Domestic #ForeignVist #Tourist #tamilnews
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்றுள்ளார்.

    காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. #SSLCResult #TNResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளி முதலிடத்தில் உள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.79 ஆகும். பெண்கள் பள்ளிகள் 96.27 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.81 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீதம், அரசுப் பள்ளிகள் 91.36 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 87.54 சதவீதம் என்ற அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.



    பாடவாரியாக பார்க்கையில் அறிவியல் படத்தில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 96.75 சதவீதம், ஆங்கிலத்தில் 96.50 சதவீதம், மொழிப்பாடத்தில் 96.42 சதவீதம், கணிதத்தில் 96.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், மொத்த மதிப்பெண் அடிப்படையிலான பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை http://dge.tn.nic.in/SSLC_2018_ ANALYSIS.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #SSLCResult #TNResult
    ×