search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "499 marks"

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்றுள்ளார்.

    காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    ×