என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 499 மதிப்பெண்களுடன் நொய்டா மாணவி முதலிடம்
Byமாலை மலர்26 May 2018 1:28 PM IST (Updated: 26 May 2018 1:28 PM IST)
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
புதுடெல்லி:
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்றுள்ளார்.
காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult

Next Story
×