என் மலர்
நீங்கள் தேடியது "local holiday"
- தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
- உள்ளூர் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்டு 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு 9ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
- தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
- அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
- கோவை மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
- நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- நீலகிரிக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மசாவட்டங்களுக்கும் இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 14) விடுமுறை அறிவிப்புக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
- வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு:
காரைக்காலில் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகப்பகுதியான நாகப்பட்டினம், தஞ்சாவூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதனை ஏற்று இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.
- விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.
தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சேர்கிறார்.
பிறகு அன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
- மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி விடுமுறை அறிவிப்பு.
- அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.
கரூர் மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.
- மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
- மே 12-ந்தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்றைய தினம் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் மாதம் 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடுசெய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே மே மாதம் 12-ந்தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமயபுரம் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 3-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை (04.04.2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளைய விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
- 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






