என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
    X

    திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

    • தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
    • அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    எனினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×