search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth skill festival"

    • இருபாலருக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
    • பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் இளைஞா் திறன் திருவிழா நாளை 18-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்பற வாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்பூா் மாவட்டம் சாா்பில் வட்டம் வாரியாக இளைஞா் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதில் கிராமப்புற பகுதியில் உள்ள 18 வயது முதல் 35 வயதுடைய 10, பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் தவறிய ஆண், பெண் இருபாலருக்கும் அரசுத் துறை மற்றும் தனியாா் துறை நிறுவனங்களை கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதில் கைப்பேசி ஹாா்டுவோ் பழுதுபாா்ப்பவா், சிஎன்சி ஆபரேட்டா், தையல் எந்திரம் இயக்குபவா், மொ்சன்டைஸா், வெல்டிங், பேஷன் டிசைனிங், காளான் வளா்ப்பு, மகளிா் டெய்லா், சணல் பை தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, அலங்கார நகைகள் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

    அதேபோல, தீன்தயாள் உபத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின்கீழ் திறன் பயிற்சியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் திறன் பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, புத்தகம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தபின் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன், சுய தொழில் பயிற்சி முடிக்கும் இளைஞா்களுக்கு தொழில் தொடங்கி கடன் உதவி ஏற்பாடு செய்து தரப்படும்.

    ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரை 94440-94396 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞா் திறன் திருவிழா நடைபெறும் இடங்கள்: திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நாளை 18-ந் தேதியும், வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 26ந் தேதியும், தாராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 27-ந் தேதியும், குண்டடம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 2ந் தேதியும், பெதப்பம்பட்டி என்.வி.பாலிடெக்னிக் கல்லூரியில் செப்டம்பா் 3-ந்தேதியும் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 9-ந் தேதியும், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 17ந்தேதியும், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 24ந்தேதியும் திறன் திருவிழா நடைபெறுகிறது.

    • இளைஞர் திறன் பயிற்சிக்கு 352 பேர் கலந்து கொண்டனர்.
    • திறன் பயிற்சிக்கு 173 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பல்லடம் :

    தமிழ்நாடு மாநில இயக்கம் ஊரக,நகர்ப்புற திருப்பூர் மாவட்டம் சார்பாக கிராமப்புற பகுதியை சார்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் இளைஞர் திறன் பயிற்சிக்கு இளைஞர்களை தேர்வு செய்திடவும், பல்லடம் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 352 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு திறன் பயிற்சிக்கு 173 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 257 பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட இயக்குநர் மதுமதி, உதவி திட்ட அலுவலர்கள் முத்து, லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேஷ், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாமஸ் கிருஷ்டோபர்,ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×