search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theft"

    • பணி முடிந்து தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை இஞ்ஞாசி மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன் (வயது41). இவர் புதுைவ செஞ்சி சாலையில் தனியார் நிதி நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் பணி முடிந்து தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் வெங்கட கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வெங்கட கிருஷ்ணன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர்கல்யாணி .ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் பெரியசாமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நிலையில் கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கல்யாணி யுடன் அவரது தாய் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்யாணி மற்றும் அவரது மருமகன் ஆகியோர் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் வயதான கல்யாணியின் தாய் மட்டும் இருந்துள்ளார் .அப்போது கல்யாணி வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த கல்யாணியின் தாயிடம் வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லி உள்ளார் பின்னர் மூதாட்டிக்கு தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை உடைத்து 12 ஆயிரம் பணம் மற்றும்3 பவுன் தங்க நகை உள்ளிட்ட வற்றை திருடி சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று மாலை கல்யாணியின் மருமகன் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார் .

    பின்னர் இதுகுறித்து சின்னசேலம் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .இதே போல் இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இரு இடங்களில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • பொன்னமராவதி நெல் மண்டியில் ரூ.3 லட்சம் திருட்டு நடைபெற்று உள்ளது
    • கண்கா ணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

    பொன்னமராவதி,

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்கா கோட்டை யூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலமு ருகன் (வயது 51).இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதிக்குட்பட்ட காட்டுப்பட்டி ஊராட்சி தெய்வானைநகர் எதிரே புதுக்கோட்டை செல்லும் சாலையில் நெல் கமிஷன் மண்டி அமைத்து வியாபா ரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் மகன் திருமணத்திற்கு பத்திரிகை வைப்பதற்காக பாலமுருகன் வெளியூர் சென்றதால், அவரது மகள் சண்முகப்பி ரியா கடையை பார்த்து வந்தார்.சண்முகப்பிரியா வியா பாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.வழக்கம் போல் காலை யில் கடையை சண்முகப்பி ரியா கடையை திறந்துள்ளார். அப்போது கடையில் இருந்த கல்லாபெட்டி உடைக்கப்ப ட்டும், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவாகும் பெட்டியும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும் கல்லாவில் இருந்த ரூ.3 லட்சத்தையும், ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.இது குறித்து அவர் பால முருகனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதை யடுத்து பாலமுருகன் கடைக்கு வந்து பார்வையிட்டார்.பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் பொன்னம ராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமை யில் காவல் உதவி ஆய்வா ளர் மணிகண்டன், காவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப் பட்டது.மேலும் அப்பகுதியில் உள்ள டைகளில் கண்கா ணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் ரூ. 3 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடிவரு கின்றனர். இந்த கொள்ளை சம்ப வம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஊசுட்டேரி கன்னியகோவில் பின்புறம் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார்.
    • ஆடுகள் திருடுபோனது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் வசந்த் நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் சரண்ராஜ் (வயது 28). இவர் ஊசுட்டேரி கன்னியகோவில் பின்புறம் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி யன்று காலை சரண்ராஜ் பட்டிக்கு சென்றார்.

    அப்போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 100 ஆடுகளில் 25 ஆடுகள் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து சரண்ராஜ் ஆடுகள் திருடுபோனது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே கரிச்சிபாளையத்தில் அட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளி ரவு கோவிலில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் கள் ரூ.8 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலை திருடி தப்பிச் சென்றனர்.

    பின்னர் கொள்ளையர்கள் இந்த கோவிலில் அருகே உள்ள வீரமாஸ்தி அம்மன் கோவிலில் ரூ.2 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலையும் திருடினர். இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் செந்தில் ஆண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் அரிவாள் ஆகியவற்றையும் திருடி சென்றனர்.

    மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளையர் உண்டியலை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளியால் ஆன சாமி சிலைகள் திருட்டு போயிருந்தது.

    நெல்லை:

    பாளை கொங்கந்தான் பாறையை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 83). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான வீடு கொங்கந்தான் பாறை யில் உள்ளது. அங்கு மாதத்திற்கு ஒருமுறை வந்து செல்வார். மற்ற நேரத்தில் வீடு பூட்டி இருக்கும்.

    கடந்த 6-ந் தேதி வீட்டுக்கு வந்துவிட்டு பெங்களூர் சென்று விட்டார். நேற்று அவரது வீட்டிற்கு வாசல் தெளித்து கோலம் போடும் பணிப்பெண் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளியால் ஆன சாமி சிலைகள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

    ராமநாதனின் வீட்டில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தியிருந்த நிலையில் அதற்கான ஹார்ட் டிஸ்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மடப்பரம் காளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் போது உதவி ஆணையர் தங்க கொலுசு திருடினார்.
    • அதன்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    தமிழக அரசின் அறநிலை யத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிர சித்தி பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது கோவில் அறநி லையத்துறை உதவி ஆணை யர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தலா நான்கு சவரன் எடையுள்ள இரு தங்க கொலுசுகளை மறைத்து வைப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அங்கிருந்து அலுவலர்கள் கேட்டபோது நான்கு சவரன் எடையுள்ள ஒரு கொலுசை மட்டும் வில்வமூர்த்தி திரும்ப ஒப்ப டைத்துள்ளார். மற்றொரு கொலுசை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. உண்டியல் எண்ணும் இடத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வில்வ மூர்த்தி தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மடப்புரம் கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிவகங்கை இணை ஆணையருக்கு இச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூரில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வசிப்பவர் பாஸ்கர். தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் கடந்த 7-ந் தேதி ஐந்தே முக்கால் பவுன், ரூ.18 ஆயிரம் திருட்டு போனது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்ததால், போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது 27), என்பதும், கவுன்சிலரின் மகன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சாக்லேட் வாங்குவது போல நடித்து துணிகரம்
    • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

    கருமத்தம்பட்டி,

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி மகஜான்(55).

    இவர் சோமனூர் பவர் ஹவுஸ் தனியார் பள்ளி எதிரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடையில் அவருடன், அவரது மனைவியும் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று 2 பேரும் கடையில் இருந்தனர். அப்போது பீர் முகமதுக்கு வெளியில் வேலை இருப்பதாகவும், கடையை பார்த்துக்கொள் என மனைவியிடம் கூறி விட்டு வெளியில் சென்றார்.

    இதையடுத்து கடையில் மகஜான் மட்டும் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றனர். அங்கிருந்த மகஜானிடம் ரூ.20 எடுத்து கொடுத்து சாக்லெட் கொடுக்குமாறு கேட்டனர்.

    அவரும் சாக்லெட்் எடுக்க சென்றார். அப்போது வாலிபர்கள் 2 பேரும் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியான அவர் திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.

    ஆனால் வாலிபர்கள் 2 பேரும் நகையை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து மகஜான் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும், பின்னர் நகையை பறித்து கொண்டு தப்பியோடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து நகை பறித்து சென்ற மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர் மோகினி பாலம் அருகே திருட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயு தங்களை காண்பிப்பதற்காக 3 பேரை அழைத்து சென்ற னர்.

    கடலூர்:

    கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் அருகே இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. கடந்த மாதம் 12 -ந் தேதி வாகன ஷோரூமில் ஜன்னலை உடைத்து ஒரு கும்பல் லாக்கரில் இருந்த 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை திருடி சென்றனர்.இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, அங்கிருந்து சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். இதில் மர்ம நபர்கள் வந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது 3 வட மாநிலத்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் அப்துல் ஷேக் (வயது 50), மேற்கு வங்காளத்தை சேர்ந்த தாரிக் அஜீஸ் (வயது 29), சாதிக்குல் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர்கள் பெரிய அளவிலான கும்பலாக செயல்பட்டு வந்ததும், குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களை தேர்வு செய்து வட மாநில கும்பலிடம் தெரிவிப்பது, அங்கிருந்து ஒரு கும்பல் சம்பவ இடத்திற்கு வந்து பணம் மற்றும் நகைகளை திருடி கொண்டு உடனடியாக வட மாநிலத்திற்கு தப்பித்து செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கடலூர் மோகினி பாலம் அருகே திருட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயு தங்களை காண்பிப்பதற்காக 3 பேரை அழைத்து சென்ற னர். அப்போது அப்துல் சேக் திடீரென்று தப்பித்து ஓட முயற்சி செய்தார். இதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு கார் டிரைவர் தப்பி சென்று விட்டார்.
    • சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே நங்கவள்ளியில் பட்டுச்சேலை கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இந்த கடைக்கு பட்டு சேலை எடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் சொகுசு காரில் வந்தனர். அவர்கள் செல்வகுமார் கடைக்குள் சென்று அங்கு பட்டு புடவைகள் ஒவ்வொன்றாக எடுத்து மாடல் பார்த்தனர்.

    அவற்றின் விலையை கேட்டறிந்தபடி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல் வசதியானவர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டு விலை உயர்ந்த பட்டு சேலை கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர். அதன்படி விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் ஒவ்வொன்றாக அவர்களிடம் காண்பிக்கப்பட்டது.

    அப்போது ஒரு பெண் மட்டும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்ததை கண்ட கடை உரிமையாளர் சந்தேகம் அடைந்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது அந்த பெண் பட்டுச்சேலையை உள்ளாடையில் மறைத்து வைத்து வெளியே நிறுத்தி வைத்த சொகுசு காரில் திருடி வைப்பது தெரியவந்தது.

    உடனடியாக கடை உரிமையாளர் சந்திரசேகர் அந்த 2 ஆந்திர மாநில பெண்களையும் பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போது வெளியே இருந்த சொகுசு காரில் டிரைவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் பட்டு சேலை திருடிய 2 பெண்களையும் அழைத்து வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.

    இதையடுத்து நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பெண்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் இங்கலூர் பேட்டையை சேர்ந்த ரந்தின (வயது 35), புவலட்சுமி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. சொகுசு காரில் தப்பி சென்ற டிரைவர் குறித்தும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பிடிபட்ட ரந்தின, புவலட்சுமி ஆகியோரை கைது செய்து இதுபோல் வேறு எங்கெல்லாம் குறி வைத்து பட்டுச் சேலைகளை திருடினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
    • பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60).

    இவர் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே திட்டை செல்லும் சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த சேகர் கடையினுள் சென்று பார்த்தபோது பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார் .

    அப்போது கல்லாப்பெட்டி மேஜை சுமார் 200 மீட்டர் தூரத்தில் எதிரே உள்ள கட்டுமான பணி நடைபெறும் கட்டடம் அருகே கிடந்தது.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சேகர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×