என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    கருமத்தம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    • சாக்லேட் வாங்குவது போல நடித்து துணிகரம்
    • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

    கருமத்தம்பட்டி,

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி மகஜான்(55).

    இவர் சோமனூர் பவர் ஹவுஸ் தனியார் பள்ளி எதிரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடையில் அவருடன், அவரது மனைவியும் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று 2 பேரும் கடையில் இருந்தனர். அப்போது பீர் முகமதுக்கு வெளியில் வேலை இருப்பதாகவும், கடையை பார்த்துக்கொள் என மனைவியிடம் கூறி விட்டு வெளியில் சென்றார்.

    இதையடுத்து கடையில் மகஜான் மட்டும் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றனர். அங்கிருந்த மகஜானிடம் ரூ.20 எடுத்து கொடுத்து சாக்லெட் கொடுக்குமாறு கேட்டனர்.

    அவரும் சாக்லெட்் எடுக்க சென்றார். அப்போது வாலிபர்கள் 2 பேரும் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியான அவர் திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.

    ஆனால் வாலிபர்கள் 2 பேரும் நகையை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து மகஜான் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும், பின்னர் நகையை பறித்து கொண்டு தப்பியோடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து நகை பறித்து சென்ற மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×