search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theft"

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மொபைல் கடை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது பட்டப்பகலில் மோட்டர் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார்.
    • 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி, பாலசமுத்திரம், முருங்ககாட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவகோகுல் (வயது 24). இவரது விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சல் முடித்து, மாலையில் அனைத்து ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 செம்மறி ஆடுகள் மற்றும் 5 செம்மறி ஆட்டுக்குட்டிகள் என மொத்தம் 8 ஆடுகள் காணாமல் போயிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் சென்று தேடிப்பார்த்தும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகோகுல் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதுசமயம் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பக்கம் உள்ள பச்சாபாளையம் கரடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 38), ஈரோடு, வெங்கியம்பாளையம் பகுதியை சேர்த்த விஜயகுமார் (35), ஈரோடு, கடைசி குப்பி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பேரறிவாளன் (24), ஹரிமுகேஷ் (21) என்பதும் இவர்கள் 4 பேரும் செம்மறி ஆடுகளை திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் விவசாய, கூலி வேலைக்கு சென்று கொண்டு இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நெல்லை:

    பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்.

    சித்தா டாக்டர்

    இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    ரூ.30 ஆயிரம் திருட்டு

    இவரது வீட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து விடுப்பில் சென்றதால் வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த சங்கர்( 34) என்பவர் கடந்த 3 நாட்களாக அவரது வீட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர்களது வீட்டில் சம்பவத்தன்று ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போனது.

    கைது

    இது குறித்து திலகவதி ஐகிரவுண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பணத்தை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வாடிப்பட்டி அருகே கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோவில் கொடி மரம் அருகே 3 அடி உயர உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.

    நேற்று இரவு பணியாளர்கள் பூஜைகள் முடிந்ததும் பூசாரி, பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்த போது வாயிலின் முன்புறமுள்ள கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகில் சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் அருகில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் மேட்டுப் பெருமாள் நகரில் அமைந்துள்ள நீலமேக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக தகவல் வந்தது.

    2 கோவில்களிலும் இருந்த உண்டியல்களில் இருந்து எவ்வளவு பணம்? திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

    ஒரே நாள் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 கோவில்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொள்ளையர்கள் இதனை நோட்டமிட்டு திட்டமிட்டு 2 கோவில்களிலும் கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே நாள் இரவில் அருகருகே உள்ள 2 கிராமங்களின் பழமையான கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாடகையை முடித்து கொண்டு வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் எதிர்புறம் வேனை நிறுத்துவது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஈச்சர் வேனை தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் மூர்த்தி (வயது 54). இவர் ஈச்சர் வேன் சொந்தமாக வைத்து, அதனை வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

    மூர்த்தி வாடகையை முடித்து கொண்டு வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் எதிர்புறம் வேனை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வேனை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அடுத்த நாள் காலையில் வந்து பார்க்கும்போது வேனை காணவில்லை. இதனால் பதறிபோன மூர்த்தி, இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஈச்சர் வேனை தேடி வருகிறார்கள்.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி கடலூர் ரோடு சாமியார் தர்கா ெரயில்வே சப்வே அருகே அமைந்துள்ளது அய்யனார்கோவில்.இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக் கோவில் குலதெய்வ கோவிலாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சன்னதியில் கருங்கல்லால் ஆன விநாயகர் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த 18-ந் தேதி காலைபூஜை செய்யபூசாரிசென்றபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.விநாயகர் சன்னதி யில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கோவில் தர்மகர்த்தா ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு ,பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் சிலையை தேடி வருகின்றனர்.

    மிளகாய் பொடி தூவி சென்றுள்ள கொள்ளையர்கள்

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோட்டில் வசிப்பவர் பூவாராகசாமி மகன் சந்துரு (வயது 45). இவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மீதமுள்ள கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீடு சேதமடைந்துள்ளதால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, காலியாக உள்ள மற்றொரு கடையில் தனது மனைவி, மகனுடன் தங்கினார்.இன்று காலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதேபோல வீட்டிற்குள் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும், வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளதையும் கண்டார். இது தொடர்பாக சந்துரு சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு நகரின் மையப்பகுதியில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து நிலையில் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலத்தை சேர்ந்தவர் மாரி(67) விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் மாரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து நிலையில் கிடந்துள்ளது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகை, வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரம், பத்தாயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மின்அதிகாரியின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.
    • அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் செல்லும் சாலையில் கிருஷ்ணாநகர் பகுதி உள்ளது.

    இங்குள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏலக்காய் வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர்.

    இதேபகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகளுக்கு மங்களூரில் வளைகாப்பு நடைபெறுவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

    அன்னலட்சுமியின் உறவினரான மணிகண்டன் தினமும் வீட்டுமுன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.

    இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி பெரியசாமி தலைமையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ேமாப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்களை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீட்டில் 30 பவுனுக்கு மேல் நகைகள் இருந்ததாகவும், சுமார் ரூ.2 லட்சம் பணம் இருந்ததாகவும் அன்ன லட்சுமி தெரிவி த்துள்ளார். கொள்ளையடித்த நபர் அருகில் இருந்த ஒரு மேர்டடார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போடியில் உள்ள ஒரு ஜவுளிகடைக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு வாலிபர் கடையில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார். ேமலும் எந்தவித பதட்டமும் இல்லாமல் கடைக்குள் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அது தனக்கு சரியாக உள்ளதா என போட்டுப்பார்த்து 10-க்கும் மேற்பட்ட பேண்ட்-சட்டைகளை திருடி ச்சென்றார்.

    இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் போலீஸ் நிலையத்தில் அளிக்க ப்பட்டதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையன தேடி வருகின்றனர். இதனிடையே மற்றொரு சம்பவமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கிருஷ்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வா ரியஅதிகாரி முருகதாஸ் என்பவர் வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டிற்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.

    இன்று காலை அவரது மகள் வீட்டிற்கு வந்தபோது கொள்ளை நடந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியசாமி நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, முருகன் என்பவர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் காசாளராக டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் என்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரையிலான விற்பனையை முடித்துக்கொண்டு அந்த பணத்தை தச்சநல்லூரில் வசிக்கும் உரிமையாளரான பெரியசாமி வீட்டில் கொண்டு ஒப்படைப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று மதியம் பூ விற்ற தொகையான ரூ.1 1/4 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவர் தச்சநல்லூருக்கு புறப்பட்டார். அந்த பணத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் தச்சநல்லூர் செல்லும் வழியில் ஒரு கோவிலின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் சென்று டீ குடித்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம், தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி வெளியே வந்த தச்சநல்லூர் துர்க்கையம்மன்கோவில் தெருவில் வசிக்கும் முருகன்(வயது 45) என்பவர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் பூக்கடையில் இருந்து அவரை நோட்டமிட்டு முருகன் பின்தொடர்ந்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் தேடி பார்த்த நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அவர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சில மணி நேரங்களில் திருடனை மடக்கி பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • உத்தண்டுராஜ் கடந்த 15-ந் தேதி இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார்.
    • பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் முருகேசன்நகர் பகுதியை சேர்ந்தவர் உத்தண்டுராஜ். (வயது 39).

    இவர் கடந்த 15-ந் தேதி இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (24), மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து மாட்டு கொட்டகைகளில் கட்டியிருந்த 2 மாடுகளை மினிலாரி மூலம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், வேலாயுதம், மாசானமுத்துவை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மாடுகள், மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர்-திருவாதவூர் சாலையில் உள்ள மில்கேட் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் மணி, எண்ணை செக்கு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.

    இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட் கள் சிதறி கிடந்தன.

    உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள்,ரூ.50 ஆயிரம், மேலும் சில பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மேலூர் போலீஸ் நிலை யத்திற்கு மணி தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

    இங்கு வந்த மோப்பநாய் பெரியார் கால்வாய் பகுதி வரை ஓடி நின்றது. அந்த பகுதியில் இருந்த கண் காணிப்பு காமிரா பதிவு களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வீட்டிற் குள் மர்மநபர்கள் செல்வது மற்றும் பொருட்க ளுடன் திரும்பி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படை யில் போலீசார் வழக்குப பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×