என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு- பரபரப்பு
    X

    திருட்டு நடந்த கடையில் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்தது.

    அரிசி கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு- பரபரப்பு

    • கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.
    • பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60).

    இவர் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே திட்டை செல்லும் சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் பாதி திறக்கப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த சேகர் கடையினுள் சென்று பார்த்தபோது பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டி மேஜை காணாதது கண்டு திடுக்கிட்டார் .

    அப்போது கல்லாப்பெட்டி மேஜை சுமார் 200 மீட்டர் தூரத்தில் எதிரே உள்ள கட்டுமான பணி நடைபெறும் கட்டடம் அருகே கிடந்தது.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சேகர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×