என் மலர்
நீங்கள் தேடியது "Vehicle Showroom"
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் அருகே இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. கடந்த மாதம் 12 -ந் தேதி வாகன ஷோரூமில் ஜன்னலை உடைத்து ஒரு கும்பல் லாக்கரில் இருந்த 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை திருடி சென்றனர்.இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, அங்கிருந்து சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். இதில் மர்ம நபர்கள் வந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது 3 வட மாநிலத்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் அப்துல் ஷேக் (வயது 50), மேற்கு வங்காளத்தை சேர்ந்த தாரிக் அஜீஸ் (வயது 29), சாதிக்குல் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர்கள் பெரிய அளவிலான கும்பலாக செயல்பட்டு வந்ததும், குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களை தேர்வு செய்து வட மாநில கும்பலிடம் தெரிவிப்பது, அங்கிருந்து ஒரு கும்பல் சம்பவ இடத்திற்கு வந்து பணம் மற்றும் நகைகளை திருடி கொண்டு உடனடியாக வட மாநிலத்திற்கு தப்பித்து செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கடலூர் மோகினி பாலம் அருகே திருட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயு தங்களை காண்பிப்பதற்காக 3 பேரை அழைத்து சென்ற னர். அப்போது அப்துல் சேக் திடீரென்று தப்பித்து ஓட முயற்சி செய்தார். இதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






