search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager arrested"

    • ஆத்திரமடைந்த தணிகாசலம் தனது நண்பர் ரகுநாத்தை பீர் பாட்டில்களால் தாக்கினார்.
    • காயம் அடைந்த ரகுநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் தணிகாச்சலம் என்பவருடன் புதுவை மாநிலம் குருவி நத்தத்தில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு, புதுவை மாநில பகுதியில் மது வாங்கிக் கொண்டுவந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த தணிகாசலம் தனது நண்பர் ரகுநாத்தை பீர் பாட்டில்களால் தாக்கினார். இதில் காயம் அடைந்த ரகுநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ரகுநாத் கொடுத்த புகாரின் பேரில் தணிகாசலம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம்அருகே ரிஷிவந்தியம் ஒன்றியம் நூரோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் கமலகண்ணன்(45). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன் ரகோத்(29) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று ரகோத் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கமலகண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ரகோத், இவரது தம்பி முருகவேல், வாஞ்சிநாதன் ஆகிய 3 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாரிமுத்து 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.
    • ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 26). இவர் 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் மாரிமுத்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • முருகவேல்ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
    • ஆனந்த்என்பவர் கல்லூரி மாணவிகளிடம் தகராறு ஈடுபடுவதை பார்த்த முருகவேல், அதனை தட்டி கேட்டுள்ளார்.

    திருச்சி,

    திருச்சி தொட்டியம் ஸ்ரீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல்(வயது46). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    திருவானைக்கோவில் பஞ்சகரை யாத்திரிகர் நிவாஸ் பகுதியை சேர்ந்த ஆனந்த்(32) என்பவர் கல்லூரி மாணவிகளிடம் தகராறு ஈடுபடுவதை பார்த்த முருகவேல், அதனை தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தைகளால் திட்டி முருகவேலை தாக்கியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.

    • வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • புதுவையில் கஞ்சா விற்போர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் கஞ்சா விற்போர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், கஞ்சாவை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. புதுவை நகர பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்து விட்ட நிலையில் தற்போது கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் அருகே பரிக்கல்பட்டு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோவுக்கும் மேலாக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார்.

    காரைக்கால்:

    தமிழகப்பகுதியை சேர்ந்த ஒருவர், 14 வயது சிறுமி உள்ளிட்ட தனது குடும்பத்துடன் காரைக்கால் நகர் பகுதி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த 14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார். அப்போது அங்குவந்த அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மைக்கேல் (வயது23) என்பவர், ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை கொண்டுவந்து, சிறுமியின் தொடையில் விட்டுள்ளார்.

    பயந்துபோன சிறுமி சத்தம் போடவே, சிறுமியின் கை களை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள், மைக்கேலின் செயலை பார்த்து, மைக்கேலை பிடித்து அடித்து, உதைத்து, காரைக்கால்நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சேத்தியாத்தோப்பில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி. ரூபன் குமார் உத்தரவின் பேரில் குற்ற பிரிவு தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் மற்றும் போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பேசினார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் புவனகிரி அருகே சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (வயது 20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, முரளிதரனையும் கைது செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    • கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம வெள்ளிமலை அருகே தாழ்தேவனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 21) இவர் கர்நாடகா மாநிலம் சிங்கமங்களூர் அருகே பண்ணூர், கங்கவெள்ளி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு அந்த பெட்டி கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது மைனர் பெண்ணிடம் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சேகர் மைனர் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவருடன் போனில் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் சொந்த வேலைகா ரணமாக ஊருக்கு திரும்பி வந்து விட்டார். சம்பவத்தன்று மைனர் பெண் சேகரிடம் தொலை பேசியில் பேசினார். அப்போது நானும் உங்கள் ஊருக்கு வந்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு சேகர் புறப்பட்டு வா என சொல்லியுள்ளார். அதன்படி மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார். அவர்களை சேகர் தாழ் தேவனூருக்கு அழைத்துச் சென்றார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 3- ந் தேதி சேகர் மைனர்பெண்ணை (17) என்பவரை பரிகம் கிராமத்தில்உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வும், மைனர் பெண்ணிடம் சேகர் உல்லாசமாக இருந்து ள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேகர் வீட்டில் இல்லாதபோது மைனர் பெண் தனது தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்கள் இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.

    • மரக்காணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கைப்பணி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). இவர் அங்ள்ள கடலோரப் பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், விஜயரங்கன் மற்றும் போலீசார் ரோந்துபணி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நின்ற வாலிபர் சஞ்சையை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.

    • திட்டக்குடியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர்.

    கடலூர்:

    திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட வதிஷ்ட புரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வதிஷ்டபுரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசன் மகன் ஆங்கி என்ற ராதாகிருஷ்ணன் (24)என்பவர் பிடித்து அவரது வீட்டில் சோதனை செய்த பொழுது வீட்டிற்கு பின்புறம் அடிக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

    • வில்லியனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • வில்லியனூர் அருகே சுல்லதான்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே சுல்லதான்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவரது சட்டை பையில் 5 கிராம் கொண்ட சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர். மொத்தம் 20 பாக்கெட் கஞ்சாவை அந்த வாலிபர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லியனூர் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த சரண் என்ற சரண்ராஜ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரண்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    • பெருந்துறை போலீசாருக்கு பீடா கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம் பத்ரா மாவட்டம் திகிடி தாலுகா வருணை பகுதியை சேர்ந்தவர் அபய்குமார் பகரா (வயது 30). இவர் தற்பொழுது பெருந்துறையை அடுத்துள்ள மலைச்சீனாபுரம் பகுதியில் குடியிருந்து பீடா கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பெருந்துறை போலீசாருக்கு இவரது கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    இதில் கடையில் 80 கிராம் கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 11 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அபய்குமார் பகராவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×