என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காரைக்காலில்  14 வயது சிறுமியின் உடலில் உயிர் நண்டைவிட்டு பாலியல் சீண்டல் போக்சோ வழக்கில் வாலிபர் கைது
  X

  வாலிபரை கைது செய்த போலீசாரை படத்தில் காணலாம்.

  காரைக்காலில் 14 வயது சிறுமியின் உடலில் உயிர் நண்டைவிட்டு பாலியல் சீண்டல் போக்சோ வழக்கில் வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார்.

  காரைக்கால்:

  தமிழகப்பகுதியை சேர்ந்த ஒருவர், 14 வயது சிறுமி உள்ளிட்ட தனது குடும்பத்துடன் காரைக்கால் நகர் பகுதி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த 14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார். அப்போது அங்குவந்த அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மைக்கேல் (வயது23) என்பவர், ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை கொண்டுவந்து, சிறுமியின் தொடையில் விட்டுள்ளார்.

  பயந்துபோன சிறுமி சத்தம் போடவே, சிறுமியின் கை களை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள், மைக்கேலின் செயலை பார்த்து, மைக்கேலை பிடித்து அடித்து, உதைத்து, காரைக்கால்நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  Next Story
  ×