search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள்"

    • திருமங்கலத்தில் இலவச பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் பிள்ளையாரிடம் மனு கொடுத்தனர்.
    • தாசில்தாரை காணவில்லை என கோஷம் எழுப்பினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்ரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் அந்தந்த தாலுகாக்களில் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் 80-க்கும் மேற்பட்டோர் தங்கள் அனைவரும் தோப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதனால் அந்தந்த பகுதியில் வழங்காமல் கரடிக்கல் அல்லது தோப்பூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கடந்த வாரம் வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது வட்டாட்சியர் திருமங்கலம் தாலுகாவில் 13 பேருக்கு மட்டுமே வீட்டு மனை பட்டா வழங்கபடும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் மாறுதலாகி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதை அறியாமல் இன்று தாலுகா அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததால் தாலுகா வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பார்வை யற்றோர் மறுவாழ்வு சங்க தலைவர் குமார் தலைமையில் தாசில்தாரை காணவில்லை என கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ரேஷன் கடை பொருட்கள் நேரடியாக வீட்டிற்கு கொண்டு வந்து தர உத்தரவிட வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோட்டா ட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமரூல்ஜமான் மற் றும் அதி காரிகள் மேற்கொண்டனர்.

    கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் கலந்துகொண்டு பேசுகையில், மாற்றுத்திற னாளிகளுக்கு ரேஷன் கடை பொருட்கள் நேரடியாக வீட்டிற்கு கொண்டு வந்து தர உத்ரவிட வேண்டும். அனைத்து ரெயில்களின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனா ளிகளுக்கா ன பெட்டிகள் தவறாமல் இணைக்கப்பட வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் மாற்று த்திறனாளி களுக்கான அடையாள அட்டை முகாம்களை கும்பகோணம் பழைய நகராட்சி கட்டிடத்தில் நடத்த வேண்டும். மாற்று த்திறனாளி களுக்கான சிறப்புக்கடன் முகாம் கும்பகோணம் கோட்ட அளவில் நடத்த வேண்டும் என்றனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் கூறுகையில், மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து பெறப்பட்ட 45 மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க,
    • 5 நல உதவி திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வசதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் https://www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspxஎனற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து அதற்கான இணையதள ரசீது பெற்றுக்கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங் களது குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடை பெற உள்ளது.

    இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே கும்ப கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங் களது குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
    • 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள் யாரிடமும் உதவி கேட்காமல் வங்கி கடன் மூலமாக தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வங்கி கடன் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் இருந்து வருகிேறாம். கடந்த 2014 - 15-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் மூலமாக கடன் இல்லாத தொகையாக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பல மாற்றத்தினாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு வாழ்வாதாரம் இல்லாமல் இருந்து வருகின்றோம். ஆகையால் வங்கிகளில் சிறப்பு நிதி திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து மாற்றத்தினைகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
    • இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் , கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் , உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடன் மானிய வழங்கும் திட்டம் , அனைத்து வகை திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் , கைப்பேசிஎண், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் இணைய சேவையில் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன்னார்குடியில் 13-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டம் நடக்கிறது.
    • யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியப்பதாவது:-

    மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம். யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுதிறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் மட்டும் 2023-24ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்ல நிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழையும், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    • 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
    • மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில், 27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களது குறைகளை நேரில் தெரிவித்துக் தீர்வு காணலாம் என கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

    • கூட்டம் நாளை (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மாற்று திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
    • இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது -

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனா ளிகள் சுயதொழில்புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும் மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும் ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. 

    தற்போது, வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்திரவி ட்டதை தொடர்ந்து, கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ-சேவை அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவ தற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மா வட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் அனுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    ×