search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Patta"

    • திருமங்கலத்தில் இலவச பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் பிள்ளையாரிடம் மனு கொடுத்தனர்.
    • தாசில்தாரை காணவில்லை என கோஷம் எழுப்பினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்ரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் அந்தந்த தாலுகாக்களில் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் 80-க்கும் மேற்பட்டோர் தங்கள் அனைவரும் தோப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதனால் அந்தந்த பகுதியில் வழங்காமல் கரடிக்கல் அல்லது தோப்பூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கடந்த வாரம் வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது வட்டாட்சியர் திருமங்கலம் தாலுகாவில் 13 பேருக்கு மட்டுமே வீட்டு மனை பட்டா வழங்கபடும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் மாறுதலாகி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதை அறியாமல் இன்று தாலுகா அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததால் தாலுகா வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பார்வை யற்றோர் மறுவாழ்வு சங்க தலைவர் குமார் தலைமையில் தாசில்தாரை காணவில்லை என கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூர், மார்ச்.8- கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மலைக்குறவர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்தனர்.
    • திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் .

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மலைக்குறவர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்தனர்.  பின்னர் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் . இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களை 2வருடங்களுக்கு முன்பு என்.எல்.சி நிர்வாகம் விரிவாக்க பணிக்காக காலி செய்தததை தொடர்ந்து எங்களுக்கு சிதம்பரம் தாலுக்கா காட்டுமன்னார்கோவில் வட்டம் கூடுவெளிச்சாவடி பகுதியில் இலவச பட்டா வழங்கினார்கள்.                                          

    பட்டா வழங்கிய இடத்திற்கு நாங்கள் சென்றபோது அந்த ஊர் மக்கள் தடுத்து உள்ளே வரக்கூடாது எனக்கூறி தாக்க வந்தனர். இது குறித்து வருவாய் துறையினரிடம் புகார் அளித்த போது வருவாய்த் துறையினர் அதற்கு பதில் மாற்று இடம் தருவதாக உறுதியளித்ததால் மேற்படி பட்டாவை நீக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்கள் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
    • கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராமத்திற்கு உள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி கடந்த ஜூன் மாதம் மனு அளித்தோம். அதில் 54 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு தற்போது வரை எவ்வித பட்டாவும் வழங்கப்படாததையடுத்து, வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சமத்துவ மக்கள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலர் சின்னத்தம்பி தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர். போராட்டத்தில், கட்சியின் வடக்கு மாவட்ட செயலர் பாஸ்கரன், நகர செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், ஒன்றிய மாணவரணி துணை செயலர் தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் 1000 பேருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது.

    பண்ருட்டி 

    பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் ஜமாபந்தி திருவிழா நேற்றுதொடங்கி 21ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமாபந்தி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட்டம் தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இதில் துணை தாசில்தார்கள் சிவா சேகர் கிருஷ்ணா மற்றும் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தாசில்தார் சிவகார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது:ஜமாபந்தி நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி ஜமாபந்தி நிறைவு விழா விரைவில் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் 1000 பேருக்குஇலவச மனைபட்டா வழங்கப்பட உள்ளது ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரிகளும் தங்களது கிராமத்தில் உள்ள வீடு மனை இல்லாத ஏழை எளிய யோருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×