என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்பட்டி அருகே இலவச வீட்டுமனை வழங்கக்கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
Byமாலை மலர்13 Sept 2022 2:19 PM IST
- இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
- கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராமத்திற்கு உள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி கடந்த ஜூன் மாதம் மனு அளித்தோம். அதில் 54 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு தற்போது வரை எவ்வித பட்டாவும் வழங்கப்படாததையடுத்து, வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சமத்துவ மக்கள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலர் சின்னத்தம்பி தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர். போராட்டத்தில், கட்சியின் வடக்கு மாவட்ட செயலர் பாஸ்கரன், நகர செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், ஒன்றிய மாணவரணி துணை செயலர் தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X