search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicides"

    நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #Farmersuicide
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தலையாமழை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற உழவர் அப்பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் அவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி குறுவை நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த ராமமூர்த்தி, வாங்கிய கடனை அடைக்க முடியாதே என்ற அதிர்ச்சியில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆதமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற விவசாயியும் பயிர்கள் கருகியதால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரே மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் இடைவெளியில், இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து செல்ல முடியாது.

    காவிரி கடைமடை பாசன மாவட்டங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கருகியதால் இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் ஏராளமான உழவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

    கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லாத பினாமி அரசு தான் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது.

    பாசனக் கால்வாய்களை தூர்வாரும்படி பல முறை வலியுறுத்தியும் பயனில்லை. கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய காவிரி பாசன மாவட்டங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அதனால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    ஆனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் குறைந்த பின்னர் மணல் கொள்ளை மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்கள் யார் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு தமிழக அரசு தான் காரணம். அதனால், நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இரு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாருவதுடன், காவிரியில் மணல் அள்ளவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK #Ramadoss #Farmersuicide
    உடுமலை அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணிகண்டன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூத்தாநல்லூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவினூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுரேஷ் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இதனால் அவர் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது சம்மந்தமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த விஜயராணி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விஜயராணி அண்ணன் பாஸ்கர் கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விஜயராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சேலம் அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள வாயக்கால் பட்டறை தோப்பு காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). தொழிலதிபரான இவர் சேலம் 4 ரோடு பகுதியில் ஒரு ஆஸ்பத்திரியிலும் பணி புரிந்து வந்தார்.

    தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கிய பழனிசாமி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பருத்திபுள்ளி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- பாக்கியம் தம்பதி மகன் சுதீஷ்குமார் (வயது 28). கடந்த வாரம் ஒரு திருட்டு வழக்கில் கோட்டாய் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுப்பி விட்டனர்.

    விசாரணைக்கு வருமாறு செல்போன் மூலம் போலீசார் அழைத்தனர். இதனால் மனம் உடைந்த சுதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டார்.

    தூக்கில் உயிருக்கு போராடிய சுதீஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு காழ்ச்சைபரம்பு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது பெற்றோர் கூறும்போது, சந்தேகத்தின் பேரில் போலீசார் எனது மகனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும் திருட்டுக்கும் தொடர்பு இல்லை என்று அனுப்பி விட்டனர்.

    அப்போதே சுதீஷ் குமார் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு சமாதானம் செய்தோம். இந்நிலையில் மீண்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு எங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாய் போலீசார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.

    அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.

    பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.

    இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.

    நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.

    இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×