search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden"

    • கலெக்டரும் பகுதிகளில் உள்ள மாணவா் விடுதிகளை நேரடியாகப் பாா்வையிட்டு உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
    • பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு பிற்பட்டோா் நல மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், நாமகி ரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

    விடுதிகளில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் தரமானதாக இல்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்ட கலெக்டரும் தாம் செல்லும் பகுதிகளில் உள்ள மாணவா் விடுதிகளை நேரடியாகப் பாா்வையிட்டு உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    இதற்கிடையே நாமக்கல் ஆர்.டி.ஓ. .மஞ்சுளா நாமக்கல் பிற்பட்டோா் நல மாணவா் விடுதிக்கு சென்று உணவு வகைகளைப் பரிசோதித்தார். அதில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறியதுடன், மாணவர்கள் வருகைப் பதிவேட்டையும் அவா் ஆய்வு செய்தார்.

    சமீபத்தில் கொல்லிமலை ஒன்றியம் செங்கரை பழங்குடியின மாணவர் விடுதியில் தங்கிப் படித்த நான்கு மாணவர்கள் திடீரென மாயமாகினர். போலீஸாா் அவர்களை திருப்பூர் சென்று மீட்டு வந்தனர்.

    அதன் எதிரொலியாக, மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலும் விடுதிகளில் 

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டாா்.
    • அங்கு வந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

    நாமக்கல்:

    கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில், நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஏ.கே.பி.சின்ராஜ். நேற்று காலை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டாா்.

    அங்கு வந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதற்கு சின்ராஜ் எம்.பி. மறுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு மீண்டும் கலெக்டர் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது, 'சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டம், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தலாம், பல்வேறு காரணங்களால் கடந்த மாதங்களில் நடத்த முடியாமல் போனது என்று தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தனது போராட்டத்தைக் கைவிட்டாா்.

    அதன்பிறகு சின்ராஜ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், சாலைப் பாதுகாப்பு, மின்வாரிய கணக்குக் குழுக் கூட்டம், ஆண்டில் 4 முறை நடத்தப்பட வேண்டும். இதற்கு தலைவராக நான் உள்ளேன். மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பணிகள் நடைபெறும். இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக மாவட்ட கலெக்டருக்கு பலமுறை கடிதம் அனுப்பினேன். ஆனால், அவரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை.

    அமைச்சரானாலும், மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினரானாலும் இக்கூட்டத்தில் சாதாரண உறுப்பினா்கள் தான். காலதாமதத்தைக் கண்டித்துதான் போராட்டத்தில் ஈடுபட்டேன். தற்போது சாலை பாதுகாப்பு, வளா்ச்சிக் குழு கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் நடத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளாா். மின் கணக்குக் குழு புதிய உறுப்பினா்கள் நியமனத்திற்குப் பின் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    ஊரக வளா்ச்சித் துறையில் நிறைவுற்ற பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கால்நடைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அரசு விழாக்களில் முன்னுரிமை அளிக்காமல் என்னை அவமதிக்கும் வகையில் கலெக்டர் நடந்து கொள்கிறாா். இனிமேல் அதுபோன்ற தவறுகள் நிகழாது என தற்போது கலெக்டர் உறுதியளித்திருக்கிறாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே வயிற்று வலியால் மாணவி திடீர் பலியானார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவரது மகள் கவிப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்.சி படித்து‌ விட்டு கடந்த 3 வருடங்களாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயிற்றுவலிக்காக மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் கவிப்பிரியாவிற்கு அதிகமாக வயிற்றுவலி வந்துள்ளது.இது குறித்து அவர் அவரது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக‌ வீட்டிற்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணன் கவிப்பிரியாவை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேச்சேரி அருகே 3 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி திடீர் தற்கொலை செய்துகொண்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள கொப்பம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 70). இவருக்கு 3 மனைவிகள். எனினும் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்தார்.

    இவருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த சேட்டு கடந்த 22-ந்தேதி வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சேட்டுவின் சகோதரி பழனியம்மாள் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். மேச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×