மூச்சுதிணறல் ஏற்பட்டு வாலிபர் திடீர் சாவு

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சுதிணறல் ஏற்பட்டு வாலிபர் திடீர் சாவு
Published on

ஈரோடு:

தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com