search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden"

    • கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூப்பிட்டான் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 82). இவரது மனைவி ராமாயி (80).

    இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். ராமன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ராமனுக்கு உடல்நிலை மோசமானதால், பரமத்திவேலூர் தாலுகா, கோலாரத்தில் உள்ள அவரது மகள் சரசுவுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அவரது மகள் ராமனை, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.

    இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.

    இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், அல்லிமுத்து வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் மில்லில் தொழிலாளி திடீர் இறந்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 45). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து ஓய்வறையில் சென்று தூங்கியுள்ளார்.

    காலையில் வெகுநேரமாகியும் பூமிநாதன் எழாமல் இருந்ததால் சக ஊழியர்கள் எழுப்பிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் எழாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூமிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி
    • அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 22), விசைத்தறி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பூலாவரி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த லோகநாதன் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் சாமி ஆட வந்துள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், லோகு என்ற லோகநாதன் (25), சச்சின் (20) ஆகிய 2 பேர் மீதும் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வெள்ளரி வெள்ளி சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கோமதி (வயது 24), மாற்றுத் திறனாளியான இவருக்கு தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.

    அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோமதியின் உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கோமதி இறந்தார் என கூறி எடப்பாடி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எடப்பாடி போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர்.
    • கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம், நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேருந்து நிலையம், மற்றும் பரமத்தியில் நாமக்கல் மோட்டார் வாகன அலுவலர் முருகன் மற்றும் பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர். கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம்,நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    மேலும் இரவு நேரத்தில் பரமத்தி நகருக்குள் பேருந்துகள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது பரமத்தி தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்களும், பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேலூர் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த நாமக்கல் போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும் அந்தந்த பேருந்துகளுக்கென வாங்கிய உரிமம் அடிப்படையில் அந்தந்த வழித்தடங்களில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர். பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • கதவணை அமைக்கடும் பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது.இந்தப் பணிகளை தமிழக அரசின் நீர்வ ளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.
    • பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடு களுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே

    உள்ள அனிச்சம்பாளை யத்தில் இருந்து கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.389.00 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கதவனை 0.8 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலது புறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1458 ஏக்கர் பாசன நிலங்களும், இடது புறம் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ளது. இந்த கதவணை அமைக்கடும் பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது.இந்தப் பணிகளை தமிழக அரசின் நீர்வ ளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம், பணிகளின் முன்னேற்றம், பணிகளை முடிக்க வேண்டிய காலம்.

    ஒவ்வொரு பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடு களுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர்,நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயற்பொறியாளர் சாரா, உதவி செயற்பொறி யாளர்கள், உதவி பொறியா ளர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பாண்டமங்கலம் முதல் வெங்கரை வரை செல்லும் சாலையில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாடு செய்யப்பட்ட பணியையும் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் மற்றும் உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சாலை ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.
    • சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார்.

    சேலம்:

    சேலம் டவுன் தேவேந்திரபுரம் பகுதியில் வசித்து வருபவர் போகாராம். இவருடைய மகன் பரத்குமார் (வயது 17). இவர்களுடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.

    போகாராம் சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார். மகனை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரத்குமாரை ேதடி வருகின்றனர்.

    • இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26). இவர் சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் அருகே தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து இன்று குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமத மானது.

    இதனால் வழக்கமாக அந்த வழியில் இயங்கி வரும் 8-ம் எண் அரசு பேருந்தில் மாணவ-மாணவிகள் ஏற முயன்றனர். அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப் படுத்தினர். இதை அடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இதுகுறித்து மாணவி மவுனிகா ஸ்ரீ மற்றும் வசந்தி கூறியதாவது:-

    வழக்கமான பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் 8-ம் எண் மற்றும், 5-ம் எண் கொண்ட பேருந்துகளில் மாணவ, மாணவிகளாகிய நாங்கள் ஏறினால் நடத்துனர்கள் இடம் இல்லை எனக் கூறி இறக்கி விடுகிறார்கள்.

    பள்ளிக்கு நேரமாகிவிட்டது என கூறினால் தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பு மூஞ்சிக்கு வந்து விடும் என கூறுகிறார்கள்.

    நாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். காலையில் சென்றால் மாலை வரை வீடு திரும்ப நேர ஆகிறது. பேருந்துகளை நம்பி செல்ல வேண்டி இருப்பதால் எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மாண-மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலால் கீழேரிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×