search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student dies"

    • கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராம த்தைசேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), இவர்க ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொ ண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் மருத்துவ பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்நி லையில் மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி நேற்று முன்தினம் தனியார் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் நேற்று இறந்துபோன மாணவி விருத்தாசலம் தொகுதிக்குஉட்பட்டவர் என்பதால் தகவல் அறிந்ததும் விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் பெற்றோ ர்களுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து தனியார் பள்ளியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நியாயமானமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரேத பரிசோதனை முடிவை பொறுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தார்.

    இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறிபள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியி ல்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்க ப்பட்டிருந்த மாணவியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை நிறை வடைந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிவு தெரியும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அரசு உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார்
    • போலீஸ் விசாரணை

    போளூர், ஜூலை.3-

    திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் அரசவெளி கிராமத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது‌.

    இந்தப் பள்ளியில் நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த செவத்தான் மகன் சிவகாசி (வயது 15) என்ற சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சிவகாசிக்கு முகத்தில் முகப்பரு வந்து சீழ் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஆசிரியை மகாலட்சுமி அதை சுத்தம் செய்துள்ளார். பின்ன சிவகாசியின் தந்தை செவத்தானுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் அங்கு வந்த செவத்தான் தனது மகனை நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சென்று காட்டுங்கள் என கூறினர். தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காட்டிய போது டாக்டர்கள் சிவகாசி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செவத்தான் ஜமுனா மரத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் எப்படி இறந்தான் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் வெயில் கொடுமைக்கு 9-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் குணசேகரன். லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவகார்த்திக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பள்ளி விடுமுறையை கழிக்க சிவகார்த்திக் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்கு வந்தார்.

    இன்று காலை சிவகார்த்திக் சுட்டெரிக்கும் வெயிலில் விளையாடினார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த தாத்தா- பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிவகார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போளூரில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் பத்மாபாய் தெருவை சேர்ந்தவர் மகேஷ், பால் வியாபாரி. இவரது மகன் சுரேந்தர் (16). திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

    இன்று காலை பைக்கில் டியூசனுக்கு சென்றார். திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மெயின் ரோட்டுக்கு வந்தார்.

    அப்போது வேகமாக வந்த மினிலாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேந்தர் தலையில் அடிபட்டு இறந்தார்.

    போளூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் அட்டைப்பெட்டி ஏற்றி வந்த லாரி மோதியதில் பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சன்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஜய்குமார் (வயது 17). சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ்சில் அஜய்குமார் சத்திரப்பட்டி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பழைய பஸ் நிலையம் அருகே ஊரணி பட்டி தெரு விலக்கில் அஜய்குமார் சென்றபோது, கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அட்டைப்பாரம் ஏற்றிச் சென்ற லாரி வந்தது.

    அந்த லாரி எதிர்பாராத விதமாக அஜய்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பலியான மாணவர் அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்துக்கு காரணமான அம்பையைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா (40) கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சென்ற மாணவர், லாரி மோதி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    போரூர்:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் அமுதன். ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது மகன் அழகு சுந்தரம் (வயது 18) அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை அழகுசுந்தரம் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். எம்.எம். டி.ஏ. காலனி மெயின் ரோட்டில் உள்ள தபால் நிலையம் அருகே சென்ற போது அந்த வழியே சென்ற மாநகர பஸ்சை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அழகுசுந்தரம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம் கல்லூரியில் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவரது மகள் மகிமா (வயது18). கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

    நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாணவி மகிமாவை அழைத்து உள்ளனர். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

    எனினும் மகிதாவை கட்டாயப்படுத்தி கைப்பந்து போட்டியில் விளையாட வைத்து உள்ளனர். இதற்காக அவர் மைதானத்தை சுற்றி வந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளும், பேராசிரியர்களும் மகிமாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மகிமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மகிமாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் மகிமாவின் பெற்றோர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், “விளையாட முடியாத நிலையில் இருந்த மகளை கட்டாயப்படுத்தி விளையாடுமாறு கூறி இருக்கிறார்கள். இதனால் அவர் இறந்து விட்டார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து மகிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி மகிமா இறந்ததை அறிந்த மாணவ - மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ- மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது, அவசர சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி இறந்த சம்பவம் மாணவ- மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    பட்டுக்கோட்டை அருகே நிவாரண பொருட்கள் வாங்க வந்த மாணவி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பாவாஜிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவருடைய மனைவி ராணி(40). இவர்களுடைய மகள் அனுசுயா(19). இவர் அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய கஜா புயலில் சிக்கி கண்ணனின் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது.

    ஆனால் இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதுவரையில் நிவாரண பொருட்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு பல தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் போர்வை, பாய், கொசுவர்த்தி மற்றும் உணவு பொருட்களை வேன்களில் கொண்டு வந்து வழங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மதியம் தனியார்நிறுவனம் ஒன்றின் சார்பில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பாவாஜிக்கோட்டைக்கு வந்தது. உடனே சேதம் அடைந்த தனது வீட்டில் இருந்து அனுசுயா நிவாரண பொருட்களை வாங்க வெளியே சென்றார். ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது அருகே உள்ள ஒரு வீட்டில் மழையில் நனைந்திருந்த சுவர் திடீரென இடிந்து நடந்து சென்று கொண்டு இருந்த அனுசுயா மீது விழுந்தது.

    இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுசுயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் அருகே மொபட் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகள் சுவேதா (வயது 23). கோவை கல்வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சுபஸ்ரீ (23).

    இவர்கள் இருவரும் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தனர். பயிற்சிக்காக கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் மொபட்டில் சென்று வந்தனர். வழக்கம் போல நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர்கள் மாலையில் மருத்துவ கல்லூரிக்கு திரும்பினர். அப்போது சுவேதா மொபட்டை ஓட்டினார். சுபஸ்ரீ பின்னால் அமர்ந்திருந்தார்.

    மொபட் கொங்கணாபுரம்-மகுடஞ்சாவடி சாலையில் அழகானூர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கொங்கணாபுரம் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அவர்கள் படிக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுபஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் சக மாணவ-மாணவிகள் கதறி அழுதனர்.

    சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கேளம்பாக்கம் அருகே இன்று காலை கல்லூரி பஸ் உரசியதில் ஆட்டோ ஓரத்தில் பயணித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    கூவத்தூரை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (வயது5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இன்று காலை வெற்றி வழக்கம் போல் ஆட்டோவில் சக மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றான். அவன் ஆட்டோவில் பின் பக்க சீட்டின் ஓரத்தில் அமர்ந்து இருந்தான்.

    கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் திடீரென ஆட்டோவை உரசியபடி முந்தி சென்றது.

    இதில் ஆட்டோ ஓரத்தில் அமர்ந்திருந்த வெற்றியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர்.

    படுகாயம் அடைந்த வெற்றியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன் சாவடி களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் மோகன் (வயது 17). இவர் புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று இரவு மோகன் தனது நண்பர் சதீஷ்குமார் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆரோவில்லில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி சென்றார். பின்னால் சதீஷ்குமார் இருந்தார்.

    ஆரோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலைஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் குமார் படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜோசப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
    செஞ்சி அருகே அரசு பள்ளியில் இன்று காலை தண்ணீர் தொட்டியில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சிவராமன் (வயது 13). செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இன்று காலை சிவராமன் பள்ளிக்கு வந்தான்.

    இந்த அரசு பள்ளியில் தற்போது கழிவறை கட்டும் பணி மற்றும் கட்டிட வேலை நடந்து வருகிறது. கழிவறை கட்டுவதற்காக 10 அடி ஆழமுள்ள தொட்டி கட்டப்பட்டது. அதில் கட்டிட வேலை பணிக்காக தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை வைத்து முகம் கழுவுவதற்காக சிவராமன் குனிந்து ஒரு கப்பில் தண்ணீர் எடுத்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அந்த தொட்டிக்குள் தவறி விழுந்தான். தண்ணீரில் தத்தளித்த சிவராமன் காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டான்.

    சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி சிவராமன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவன் சிவராமன் உடலை தொட்டியில் இருந்து வெளியே மீட்டனர். தகவல் அறிந்து அவனது பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களுக்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து மாணவன் சிவராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த தொட்டி மூடப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×