search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southwest Monsoon"

    • தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெப்ப அளவு மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
    • நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கேரளம், கா்நாடகத்தில் குறைந்துள்ளது. மேலும், கடல் காற்று திசை மாற்றம் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெப்பம் நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெப்ப அளவு மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவை விட அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக மதுரையில் 106.88 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது.
    • மேற்கு திசையில் இருந்து காற்று வர வர வெப்பம் குறையும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வெப்பம் பொதுவாக குறைந்து காற்று வீசக்கூடும். ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்தது.

    பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய வெயில் இதுவரையில் சுட்டெரித்து வருகிறது. 4 மாதமாக தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் வெயிலின் தாக்கம் ஏன் அதிகமாக உள்ளது அதற்கான காரணம் என்ன என வானிலை மைய அதிகாரி கீதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

    பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுக்கிறது. அதனால் கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.

    தற்போது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் வடமேற்கு திசையில் இருந்து வருகிற காற்று தடைபட்டுள்ளது. நிலப்பகுதியில் இருந்துதான் காற்று வருகிறது. இவ்வாறு வரும்போது இடி-மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஆனால் அந்த மழையும் பெய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வரவர வெப்பம் குறையும். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று இல்லாததால் தான் வெயில் இயல்பை விட அதிகரித்தது. இனி வெப்பம் படிப்படியாக குறையும்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்று வெயில் தாக்குவது இயல்பான ஒன்றுதான். இது ஒன்றும் புதியது அல்ல. தமிழகத்தில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கர்நாடாகவில் உள்ள கபினி அணைக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து 21,107 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடிக்கு இருப்பதால் கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடியின் நீர்மட்டம் இன்று 82.27 அடியாக எட்டியுள்ளது. இதன்காரணமாக கபினி அணையில் இருந்து உபரி நீரை 20 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ். அணையில் இன்று காலை நிலவரப்படி 33,600 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 110.82 அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,362 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து மொத்தம் 21,362 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி மாலை இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 16,500 கன அடியாகவும், மாலையில் 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு கடந்த 26-ந் தேதி நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்ததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று 3-வது நாளாகவும் பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதாலும், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர். இதனால் மெயின்அருவிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோன்று காவிரி ஆற்றிலும் யாரும் இறங்கி விட கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளான முதலைபண்ணை, ஊட்டமலை, ராணிப்பேட்டை, நாடார்கொட்டாய், கூத்தப்பாடி ஆகிய பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வாகனத்தில் ஒலிப்பெருக்கியை கட்டி சென்று பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.

    தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரள கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஆற்றங்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செ்ல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குவாரி தொடர்பான நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் கிணறு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
    • டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

    தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

    பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் வெயில் தாக்கம் இல்லாமல் மழை தூறல் இருந்து கொண்டே இருப்பதால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ச்சி நிலவுகிறது.
    • சென்னை மக்கள் 4 நாட்களாக வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பித்து ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது.

    கனமழையாக இல்லாமல் ஒருசில நேரங்களில் மிதமாகவும் சில சமயங்களில் சிறு சிறு சாரலாகவும் பெய்கிறது. 4 நாட்களாக ஊட்டி, குற்றாலம் போன்ற இயற்கையான மழைச்சாரல் சூழலை சென்னை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    மேகமூட்டமும், மப்பும் மந்தாரமுமான சூழல் நிலவி வருகிறது. சிறு தூறல் சாரலாக பொழிவதால் மலைப் பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வு காணப்படுகிறது.

    நேற்று இரவு முழுவதும் மழை தூறிக் கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. விடிய விடிய சாரல் மழை பெய்ததால் குளிர்ந்து காணப்பட்டது.

    சென்னையில் வெயில் தாக்கம் இல்லாமல் மழை தூறல் இருந்து கொண்டே இருப்பதால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ச்சி நிலவுகிறது. சென்னை மக்கள் 4 நாட்களாக வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பித்து ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.

    குளிர்ந்த காற்றுடன் மழைச்சாரல் உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இரவு-பகலாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன.

    மெட்ரோ ரெயில் பணி, மேம்பால பணிகள் நடைபெறுகின்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த மழையால் சாலையில் சிறு குழிகள் தோன்றி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அந்த மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்று எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.5 மீட்டர் முதல் 2.9 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லச்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு இன்று காலை வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    • மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
    • கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு தாமதமாகவே தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் மின்சார வினியோகத்திலும் தடை ஏற்பட்டது.

    குன்னூர் கண்டோன்மென்ட் வாரியத்திற்குட்பட்ட பாய்ஸ் கம்பெனி லோயர் குரூஸ்பெட் என்ற இடத்தில் மழையால் ஆபி என்பவரின் வீட்டு தடுப்பு சுவர் இடிந்து, கீழே உள்ள ஜான்சன் என்பவரின் வீட்டில் மேல் விழுந்ததில் மேற்கூரை சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஊட்டியில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்பு படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டியில் இருந்து கிளைன்மார்கன் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

    கூடலூர்-ஊட்டி சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் அருகே பெரிய கற்களுடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டது.

    மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மண் குவியல்களை அகற்றினர்.

    1 அரைமணி நேரத்திற்கு பிறகு மண் குவியல்கள், கற்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட காப்பூர் மூலாவில் இருந்து கங்கமூலா செல்லும் சாலையில் மச்சிகரை என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ராஜன் என்பவரது வீடு இடிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 7 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளன.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் மின்கம்பமும் சரிந்து விழும் நிலயில் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய துறையினர் அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது.

    மழையுடன் கடும் மேக மூட்டமும் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி சாலை, ஊட்டி-கூடலூர் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவருமே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 171 அடி கொண்ட அவலாஞ்சி அணைக்கு வினாடிக்கு சராசரியாக, 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    மேலும், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர்பவானி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் இருவாரங்களில், மாவட்டத்தில் உள்ள, 13 அணைகளில் மின் உற்பத்திக்கு தேவையான அளவுக்கு நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    • தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் உயிருடன் மீட்டனர்.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யாமல் இருந்தது.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அவலாஞ்சியில் விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அங்கு 38 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓவேலி சாலையில் சோதனைச்சாவடியை அடுத்துள்ள கெவிப்பாறை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் நள்ளிரவு விழுந்தது. தகவல் அறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், மின்வாரிய ஊழியா்கள் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, காலையில் போக்குவரத்து சீரானது. மின்கம்பிகள் அறுந்ததால் கெவிப்பாறை, ஹெல்த்கேம்ப் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின.

    இதேபோல ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் கவர்னர்சோலை பகுதியிலும் ஒரு மரம் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் அங்கும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.

    கனமழை காரணமாக கூடலூா் எஸ்.எஸ். நகா் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டியில் வேலு என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் விடுதி கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் (40) மற்றும் குப்புசாமி (30) ஆகியோர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு 2 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் உயிருடன் மீட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    அப்பர் பவானி-105, தேவாலா-93, சேரன்கோடு-91, பந்தலூர்-70, ஓவேலி-68, நடுவட்டம்-42, ஊட்டி-18.5.

    • கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
    • வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.8 மீட்டர் முதல் 3.3 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், வயநாடு மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தும் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான தள செயல்பாடுகளுக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    கனமழையால் மண் சரிந்து சாலையில் பாதுகாப்பு சுவர் சேதமடைந்து இருப்பதால் மானந்தவாடி-கைதக்கல் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.

    • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
    • தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×