search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seminar"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மைகள் குறித்து மெர்லின் எடுத்துரைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மெர்லின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மையையும் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிந்தனைகளை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முனைவோராக மாறுவது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினார். தொழி முனைவோர் மன்றத்தின் தலைவரும், வணிகவியல் துறை பேராசிரியருமான ராஜ்பினோ நன்றி கூறினார்.

    இக்கருத்தரங்கில், பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள்,ஸ்ரீதேவி, அந்தோணி சகாய சித்ரா, சிவகுமார், சிவமுருகன், திலீப்குமார், கருப்பசாமி, திருச்செல்வன், அசோகன், ஜெயராமன், மலர்க்கொடி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி, கல்லூரி உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தொழில் முனைவோர் மேம்பாடு மன்றத்தலைவரும், இயக்குனரும், உறுப்பினர்களும் ெசய்திருந்தனர்.

    • புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரியில் தேசிய அள விலான கருத்தரங்கம் நடந்தது.
    • ஆராய்ச்சி புல முதல்வர் டாக்டர்.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரியில் தேசிய அள விலான கருத்தரங்கம் நடந்தது.

    தலைமை விருந்தின ராக மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற் றும் மருத்துவமனையின் ஆராய்ச்சி புல முதல்வர் டாக்டர்.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவ னத்தலைவரும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர்.நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் அகாடமிக் கார்த் திகேயன், மருத்துவ கண் காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். செவிலியர் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வி வரவேற்றார்.

    இக்கருத்தரங்கில் பேச்சாளராக அருள்மொழிபாஸ்கரன், வெற்றிச்செல்வி, ஜெய சங்கரி, மரியா தேரேஸ், சுமதி, அனிதா டேவிட், செவ்வந்தி, தமிழ்செல்வி, திருநாகலிங்கபாண்டியன் மற்றும் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர். நிமிட செயலாளரின் அறிக்கையை துணை பேராசிரியர் தீபாலட்சுமி வழங்கினார்.

    பங்கேற்பாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது
    • நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிலச்சீர்திருத்தம் நிலம் மற்றும் பூமிதான நிலங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தலைமையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தெரிவித்ததாவது:-

    நிலச்சீர்திருத்த சட்டம் பிரிவு 37எ – ன் கீழ் அனுமதி பெற்ற தொழில் நிறுவனங்கள்,அனுமதி பெற்ற நிலங்களை உரிய பயன்பாட்டில் வைத்துள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நிபந்தனை மீறப்பட்டுள்ளதா என்பதை மாதந்தோறும் தணிக்கை செய்யவும், நீதிமன்ற வழக்குளில் உள்ள நிலங்கள் தொடர்பாக எதிர்வாதங்களை உடன் தாக்கல் செய்யவும், பூமி தானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுத்து நிலங்களை பாதுகாக்கவும், நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் ,உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த கண்ணன், உதவிஆணையர் (கலால்) ராம்குமார், உதவி இயக்குநர் (நிலஅளவை) சசிக்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினர் வக்கீல் சுபாசினி வில்சன் பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகளை பற்றியும், அதனை முறையாக பயன்படுத்துவது எப்படி? என்றும் விளக்கம் அளித்தார்.
    • ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டவிதிகள் பற்றி விளக்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு மற்றும் பெண்கள் கல்வி மையம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற தலைப்பில் ஒருநாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தூத்துக்குடி வக்கீல் சுபாசினி வில்சன், ஆறுமுக நேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

    கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் வக்கீல் சுபாசினி வில்சன் பேசுகையில், பெண்கள் செல்போனை சரியான முறையில் பயன்படுத்தாததால் வரக்கூடிய அச்சுறுத்தல்களையும், அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பதையும் விளக்கி பேசினார். மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகளை பற்றியும், அதனை முறையாக பயன்படுத்துவது எப்படி? என்றும் விளக்கம் அளித்தார். ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பேசுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டவிதிகள் பற்றியும், போலீஸ் நிலையங்களில் வழங்கப்படும் சட்ட ஆலோசனைகள் குறித்தும் விளக்கி பேசினார். மேலும், பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, தங்கள் முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இக்கருத்தரங்கில் உள்தர மதிப்பீட்டு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலன்டு நைட் வரவேற்று பேசினார். பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராம.ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் ெசய்து வைத்தார். பெண்கள் கல்வி மையத்தின் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் முருகேஸ்வரி, சரண்யா ஆகியோர் நன்றி கூறினர். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள்பாலு, பசுங்கிளி பாண்டியன், மாலைசூடும் பெருமாள், வேலாயுதம், வசுமதி, அந்தோணி சகாய சித்ரா, கோகிலா, செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் முதுநிலை மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

    • டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவி பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக் கான புதுமை திட்டங்கள் என்னும் தலைப்பில் சர்வ தேச கருத்தரங்கு நடைபெற் றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் கருத்தரங்கை தொடங் கிவைத்து பேசினார்.

    முதல் அமர்வில் நைஜீ ரியா, ஆப்பிரிக்கா பல் கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் ராஜன் துரை ராஜ் கலந்து கொண்டு தொழில் முனைவோர் வெளிநாட்டு முதலீடு செய் யும் முறைகள் குறித்து பேசி னார்.

    இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் அர பாத் அலி சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக உஸ் பெகிஸ்தான், தொழில் நுட் பத்துறை இணைப்பேரா சிரியர் சுபைர் அலி கலந்து கொண்டு சிறு தொழில் வளர்ச்சியில் கணினி வழி கற்றலின் தாக்கம் குறித்து பேசினார். உதவி பேராசிரி யர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை பேராசிரியர் வேதிராஜன் கலந்து கொண்டு பேசினார். உதவிப்பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி தனியார் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
    • மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், வளர் இளம் பெண் களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. ஷத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை–பெற்ற கூட்டத்தில் பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி வர–வேற்று பேசினார். நிர்வாக குழு தலைவர் அய்யாதுரை, செயலர் யோகேஸ்வரன், பொருளாளர் குமரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர்கள் துளசி, மருத முத்து ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தி–னருக்கான பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் சங்கரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • தற்காப்பு கலையின் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை போன்ற பல நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடியும் என்பதை விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாகசக்கலை மன்றத்தின் சார்பாக, 'தற்காப்பு கலையும் மனவலிமையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். சாகசக்கலை மன்ற இயக்குனர் சிவ இளங்கோ வரவேற்று பேசினார்.

    ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் சங்கரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் தற்காப்பு கலையின் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை போன்ற பல நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடியும் என்பதை விளக்கி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், முருகேஸ்வரி, அசோகன், உமாஜெயந்தி, ஆன்றோ சோனியா, அமராவதி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனைப்படி சாகசக்கலை மன்றத்தின் இயக்குனர் சிவ இளங்கோ மற்றும் உறுப்பினர்கள் மருதையா பாண்டியன், மோதிலால் தினேஷ், திலீப் குமார், பிரியதர்ஷினி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்து கொண்டார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பெண்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்கள் வாழ்வின் இலக்கினை அடைய வேண்டும்.
    • போட்டிகள் நிறைந்த உலகில் குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு எவ்வித காரணங்களுக்காகவும் பின்வாங்க கூடாது

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.விழாவிற்கு என்.பி.ஆர்நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை மாணவி அனுசியாபேகம் வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை கண்காணிப்பாளர் அருள்மதி ஐ.ஏ.எஸ் பேசுகையில்,

    பெண்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்கள் வாழ்வின் இலக்கினை அடைய வேண்டும். எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சி யுடன் இலக்கினை அடைய வேண்டும். பெண்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.

    போட்டிகள் நிறைந்த உலகில் குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு எவ்வித காரணங்களுக்காகவும் பின்வாங்க கூடாது மாணவிகள் தங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பேசினார். முடிவில் நர்சிங் மாணவர் பாபிஜான் நன்றி கூறினார்.இதில் என்.பி.ஆர்.கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவிகள், பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் டிஜிட்டல் தடயவியல், சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
    • பெரம்பலூர் தனலட்சுமி மகளிர் கல்லூரியில், வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

    பெரம்பலூர், 

    தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தடய அறிவியல் துறையின் சார்பாக "டிஜிட்டல் தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் எதிர்காலம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர்உமாதேவி பொங்கியா முன்னிலை வகித்தார். தடய அறிவியல் துறை தலைவர் எஸ்.ராணி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். பெங்களூருவில் உள்ள ஜீரோபாக்ஸ் இன் டேட்டா பிளாட்ஃபார்ம் நிபுணர் தணிகைவேல் பேசும்போது, சைபர் கிரைம் என்பது உலகளாவிய பிரச்சினை. எதிர்கால டிஜிட்டல் தடயவியல்துறைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், எல்லைகளை தாண்டி உளவுத்துறையைப் பகிர்வதும் இன்றியமையாததாக இருக்கும் என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது.
    • ஆசிரியர் சண்முகதிருக்குமரன் மதுரையும் கலைஞரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தேனி, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடக்க ஆணையிடப்பட்டது.

    அதனடிப்படையில், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் பணியாளர்கள்/அலுவ லர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் (பொ) சுசிலா வர வேற்றார்.

    மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் வானதி கருத்த ரங்கை தொடங்கி வைத்து பேசினர்.

    மீனாட்சி கல்லூரியின் முதுகலை தமிழாய்வுத் துறைத் தலைவர் சந்திரா கலைஞர் நிகழ்த்தியச் செம்மொழிச் செயற் பாடுகள் எனும் தலைப்பி லும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் தட்சிணா மூர்த்தி மொழிப்பயிற்சி எனும் தலைப்பிலும், முனிச்சாலை, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியின், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சண்முகதிருக் குமரன் மதுரையும் கலைஞ ரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துமுருகன் திரைப்படங் களில் தமிழ் வளர்ச்சி எனும் தலைப்பிலும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கணினித்தமிழ் எனும் தலைப்பிலும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் சங்கீத் ராதா காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி சட்டம், வரலாறு எனும் தலைப்பி லும் பேசினர்.

    முடிவில் தமிழாய்வு துறைத்தலைவர் சந்திரா நன்றி கூறினார்.

    • சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
    • 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற, தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பு ரை நிகழ்ச்சியில், ஊடக வியலாளர் குணசேகரன் சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் பேசினார்.

    பின்னர் அவர் கூறியதா வது:-

    உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக் கை இந்திய அளவில் 27 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டில் அது 52 விழுக்காடாக இருக்கிறது என்றும், ஒட்டுமொத்த சமூக விழிப்புணர்வு அனை வருக்கும் கல்வி, அனைத்து சமூகத்தினருக்கான விழிப் புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இந்த வெற்றி பெறப் பட்டது. அந்தக் காலத்தி லேயே தோள் சீலைப் போராட்டம் குறித்து கூறி அதற்கான வரலாற்று நிகழ்வுகளை மாணவர் களுக்கு எடுத்துரைத்தார்.பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மாவட்டத் திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாவதற்கு அரசு பெரும் முயற்சி எடுத்து இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருவதாக கூறினார். ஏறத்தாழ 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.பள்ளித் தேர்வுகளில் எப்போதுமே விருதுநகர் மாவட்டம், முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு கல்விக்கு இங்கு கொடுக்கப் படுகின்ற முக்கியத்துவம் தான் காரணம். அதுபோல இன்று நமக்கு கிடைத்திருக்கக் கூடிய சமூக நீதி என்பது கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தலைவர்களால் கிடைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும் படிப்பு அறிவை வழங்கியதன் மூலம் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, சுகாதாரம், மனிதவள குறியீடு ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தால் மட்டும்தான் முன்னிலை அடைய முடியும்.

    தமிழகம் உயர்கல்வி பயில்வதில் இந்தியாவி லேயே முதன்மை இடத்தில் உள்ளது என்றால், சாதாரண மனிதருக்கும் தரமான கல்வி என்ற சமூக நீதியின் கொள்கையால் வந்தது தான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, தனி துணை கலெக்டர் (சமூக பாது காப்புத்திட்டம்) அனிதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பிரியதர் ஷினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்ரா மசுப்பி ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், மாவட்ட நூலக அலுவலர் சுப்பிர மணியன், கல்லூரி முதல்வர் குணசேகரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாண வியர்கள், அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×