search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை கருத்தரங்கம்

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மைகள் குறித்து மெர்லின் எடுத்துரைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மெர்லின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மையையும் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிந்தனைகளை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முனைவோராக மாறுவது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினார். தொழி முனைவோர் மன்றத்தின் தலைவரும், வணிகவியல் துறை பேராசிரியருமான ராஜ்பினோ நன்றி கூறினார்.

    இக்கருத்தரங்கில், பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள்,ஸ்ரீதேவி, அந்தோணி சகாய சித்ரா, சிவகுமார், சிவமுருகன், திலீப்குமார், கருப்பசாமி, திருச்செல்வன், அசோகன், ஜெயராமன், மலர்க்கொடி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி, கல்லூரி உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தொழில் முனைவோர் மேம்பாடு மன்றத்தலைவரும், இயக்குனரும், உறுப்பினர்களும் ெசய்திருந்தனர்.

    Next Story
    ×