search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seminar"

    • ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக 'தனி மனித சுகாதாரம்' என்ற தலைப்பில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மகேந்திரன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.நித்தியானந்த ஜோதி வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டிலும் சுத்தம் வேண்டும் என்று கூறினார். மேலும் வரும் நோய்களை கண்டறிய சுய பரிசோதனை வேண்டும் என்றும் நோய்களை தடுக்க ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்றும் கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு உறுப்பினர்களான பேராசிரியர்கள் முருகேஸ்வரி, முனைவர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முதுகலை மாணவிகளும் கலந்து கொண்டனர். விலங்கியல் துறை தலைவர் முனைவர் வசுமதி நன்றி கூறினார்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி பேசினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் தங்கழகு, விவசாயஆசிரியர் சுரேஷ், ஸ்டாலின், கணினிஆசிரியர் செந்தில்குமரன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார். கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், பேராசிரியர் ஜேனட் சில்வியா ஜெய ரோஸ் ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு மருத்து வம், ஊட்டச்சத்து, மற்றும் சுகாதாரம் சார்ந்த ஆலோ சனைகளையும், வாழ்த்து களையும் வழங்கி னர்.

    புதுமண தம்பதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

    விழாவில் ஆழ்வார் திருநகரி குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வை யாளர்கள், வட்டார ஒருங்கி ணைப் பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

    • கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் 6 நாள் சித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் சித்த மருத் துவர்களுக்கான தோல் நோய்கள் மற்றும் அழகு சிகிச்சைக்கான ஆறு நாட் கள் தொடர் மருத்துவ கருத் தரங்கு நடைபெற்று வருகி–றது. இந்த நிகழ்ச்சியை பூவந்தி அரசு ஆரம்ப சுகா தார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை டாக்டர். வெங்கடேஷ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர். மீனா, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்கு னர் டாக்டர். மீனாகுமாரி, துச்சேரி மண்டல சித்த ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். சத்யரா ஜேஸ்வரன், டாக்டர். ஜெய வெங்கடேஷ்,

    கோகிலா சித்த மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வரையும் அருப்புக்கோட்டை சித்த மருத்துவமனை மருத்து வர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். முடிவில் கோகிலா சித்த மருத்துவ மனை உயர் நிர்வாக அலுவ லர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

    • இளையான்குடியில் உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
    • பேராசிரியர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் இணைந்து "உயர்கல்வி யில் தொழில்முனைவு மேம்பாட்டு திறன்" என்னும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சமுசுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

    • இக்கருத்தரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சார்ந்த மாணவர்கள் சமர்ப்பித்தனர்.
    • சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், 'அறிவியல் உபகரணம் உருவாக்கு வதில் தொழில் நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்த ரங்கிற்கு சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியின் மூத்த அறிவியல் விஞ்ஞானி முத்து செந்தில்பாண்டியன், சீனாவின் ஹெெபன்ங் நகரிலுள்ள ஹென் பல்கலைக்கழக வேதியியல் மற்றும் மூலக்கூறு ஆய்வக விஞ்ஞானி ஸ்ரீகேசவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொ ண்டனர். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசு கையில், ஆதித்தனார் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த கல்லூரி தலைவர் அதிக அளவில் பொருளுதவி செய்து ஊக்கமளிக்கிறார். மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இயற்பியல் துறை தலைவர் பாலு வரவேற்று பேசினார்.

    இக்கருத்தரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சார்ந்த மாணவர்கள் நேரடியாகவும், தைவான், சீனா, தென்கொரியா நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைய வழியிலும் சமர்ப்பித்தனர். ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை கல்லூரி முதல்வர் வெளியிட, மூத்தவிஞ்ஞானி பெற்று கொண்டார். சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் ெடல்லி, கொல்கத்தா, மும்பை, கேரளாவை சேர்ந்த மாண வர்கள், சிவசுப்பிரமணிய நாடார் பொறியல் கல்லூரி, பாரதியார், பாரதிதாசன், அழக்கப்பா, மனோன் மணியம் சுந்தரனார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

    மேலும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவு வஜீஹா கல்லூரி, ம.தி.தா. இந்து கல்லூரி, அரசு பாலி டெக்னிக் கல்லூரி, நாகர்கோவில் ஜெ.பி.கலைக்கல்லூரி, தென்காசி கடைய நல்லூர் ெமரிட் கல்லூரி, நாசரேத் மர்காசிஸ் கல்லூரி, நெல்லை சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, ஜீ.வி.என்.கல்லூரி, கோவில்பட்டி துரைச்சாமி நாடார் கல்லூரி, சாத்தூர் ஸ்ரீரா மசாமி நாயுடு நினைவுக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கின் ஒருங்கி ணைப்பாளர் செல்வராஜன் நன்றி கூறினார். ஏற்பாடு களை ஆதித்தனார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரி யர்கள் ஸ்ரீதேவி, ேசகர், லிங்கேஷ்வரி மற்றும் மா ணவர்கள் செய்திருந்தனர்.

    • ரெயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது.
    • இணையத்தில் ரெயில் பயணிகள் 13 லட்சம் பேர் ஒரு நாளுக்கு பதிவு செய்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ மேல்நிலை ப்ப ள்ளியில் இந்திய இரயில்வே யின் எழுச்சிமிக்க பயணம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அலுவலர் ஆர்.ஞானம்,உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கே.கஜேந்திரன்,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டி.ராஜராஜன்,ஜி.மார்க்ஸ்பிரியன் முன்னிலை வகித்தனர்.

    இதில் ,திருச்சிராபள்ளி தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் எம்.ஹரிக்குமார் பங்கேற்று பேசுகையில் ரயில்வேத்துறை மிகப்பெரிய நிர்வாகத்துறையாக செயல்படுகிறது.

    நாட்டில் நாள் ஒன்றுக்கு 22ஆயிரம் இரயில்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டரை கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.

    ஐஆர்டிசி இணையத்தில் ரயில் பயணிகள் 13லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பதிவு செய்கின்றனர்.

    திருச்சி தென்ன ரயில்வேயில்13 மாவட்டங்களில் 9ஆயிரத்து 151பேர் பணியாற்றுகின்றனர். ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ளது.

    அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே விதிமுறைகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்,எரிபொருட்கள் போன்றவற்றை எடுத்துசெல்வது சட்டப்படி தண்டனைகுரியது.

    அதேபோல் ரயில் தண்டவாளங்களில் சிறுவர்கள் கற்களை வைத்து விளையாடக்கூடாது.

    ரயில் தண்டவாளங்களை பயன்படுத்துவதே தவறுதான். ரயில்கள் முன்பு செல்பி எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்றவற்றை தவிர்க்கவேண்டும் என்றார.

    முன்னதாக ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் முஸ்தபா வரவேற்றார். முடிவில் பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.

    • சிறப்பு விருந்தினராக நெல்லை அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பார்வதி கலந்து கொண்டு பேசினார்.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிவ பாரதி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக 'தொழில் முனைவோர் மேம்பாடு பற்றிய கருத்தரங்கம்' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தர மதிப்பீடு ஒருங்கிணைப்பாளர் ஜீம் ரிவீஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பார்வதி கலந்து கொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி ிவ பாரதி பேசினார். அவரை பேராசிரியர் மருதையா பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார். முடிவில், பேராசிரியர் ராஜ் பினோ நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், திலீப் குமார், திருச்செல்வம், சிரில் அருண், ெஜயராமன், மோதிலால் தினேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபால் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேர்தல் எழுத்தறிவு மன்ற தொடக்க விழா நடந்தது. மன்ற இயக்குனர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் துணை வட்டாட்சியரும், தேர்தல் பிரிவு அதிகாரியுமான சங்கரநாராயணன் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து பேசினார்.

    பேராசிரியர்கள் பென்னட், திருச்செல்வன், ரூபன் சேசு அடைக்கலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மன்ற இணை பொறுப்பாளர் அந்தோணி பிரைட் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மாணவ செயலர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    • ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
    • கருத்தரங்கத்தில் 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவமும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்பணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படையின் கடற்படை அதிகாரி வீ.சிவஇளங்கோ வரவேற்று பேசினார்.

    கல்லூரி தாவரவியல் துறைதலைவர் சி.பி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம், என்றார். தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் நன்றி கூறினார்.

    தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்ணல் பிரகோஷ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமில், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து ேசகரன் மற்றும் கே.ஏ. மேல்நிலைப்பள்ளி எல்.கே. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி தேசிய மாணவர்படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட்டார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு நடத்தும் கி.ரா.வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கி.ரா.வின் படைப்புலகம் என்னும் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் அறி ஞர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் தங்கள் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக்கம் செய்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தலைமை தாங்கி னார். கல்லூரியின் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி அவர்கள் முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு வாழ்த்துரை வழங்கி னார்.

    விழாவில் துறைத்தலைவர் பரிமளா வரவேற்றார். முத்துராஜா நன்றி கூறினார். இப்பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்றுக்கொண்டார்.

    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் கருப்ப சாமி, ஜோதி முருகன், முத்துராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்க கருத்தரங்கு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.
    • புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியா பாரிகள் சங்க செயலாளர் சுதாகர், முன்னாள் செயலாளர் அசோகன், நிஷாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கே வழங்கியுள்ளது. இதற்கான தனி கணினி கண்காணிப்பு வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த வலைதளத்தில் பதிவு செய்யும் வழிகள், கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்க கருத்தரங்கு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.

    புதுவை மாசு கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று விளக்கமளித்தார். புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்க செயலாளர் சுதாகர், முன்னாள் செயலாளர் அசோகன், நிஷாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மைகள் குறித்து மெர்லின் எடுத்துரைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மெர்லின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மையையும் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிந்தனைகளை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முனைவோராக மாறுவது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினார். தொழி முனைவோர் மன்றத்தின் தலைவரும், வணிகவியல் துறை பேராசிரியருமான ராஜ்பினோ நன்றி கூறினார்.

    இக்கருத்தரங்கில், பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள்,ஸ்ரீதேவி, அந்தோணி சகாய சித்ரா, சிவகுமார், சிவமுருகன், திலீப்குமார், கருப்பசாமி, திருச்செல்வன், அசோகன், ஜெயராமன், மலர்க்கொடி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி, கல்லூரி உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தொழில் முனைவோர் மேம்பாடு மன்றத்தலைவரும், இயக்குனரும், உறுப்பினர்களும் ெசய்திருந்தனர்.

    ×