search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seal"

    • நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகள் ஏராளமாக செயல்படுகிறது.

    இதற்கிடையே நகரப்பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வாரச் சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    இதற்காக அங்கு கடை வைத்திருப்பவர்களிடம் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.

    நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல் வைக்கப்பட்டது
    • தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது

    உப்பிலியபுரம் :

    உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஜவ்வரிசி தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உணவு பொருள் தயாரிக்க, தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு சுமார் 3725 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு , பொட்டலமிடப்பட்ட ஜவ்வரிசி 5445 கிலோ உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி பிணைபத்திரம் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரசாயணம் மற்றும் உணவு பொருள்களை தொழிற்சாலையிலேயே உள்ள கிட்டங்கில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தொழிற்சாலையில் வெளியேறும் இரசாயணக் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்காலில் கலப்பதை முன்னிட்டு மேல் நடவடிக்கைகாக மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியபடுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006ன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9944959595, 9585959595 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவ்வாறு புகார் அளிக்கும் பொதுமக்களின் விபரம் ரகசியம் காக்கப்பட்டு அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை.
    • திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • செந்துறை இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது
    • முறைகேடு புகாரை தொடர்ந்து

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரபு என்பவர் நடத்தி வரும் தனியார் இ பொது சேவை மையத்தில், பிறப்பு, இறப்பு, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு உட்பட பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு இணையதளத்தில் மக்கள் விண்ணப்பிக்க செலுத்தும் பணத்தை முறையாக அரசுக்கு செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா ஆய்வு மேற்கொண்டார். இதில், முறைகேடு நடைபெறுவது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
    • காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காங்கயம் : 

    வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பது தெரியவந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த மன்றத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான சிறப்பு தனிப்படை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பதும், உரிமம் இல்லாத 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அந்த மன்றத்திற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காரைக்காலில் நேரு மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நேரு மார்க்கெட், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அடுத்தடுத்து இடிந்து விழுந்ததால், வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அதே இடத்தில், பழமை மாறாமல், புதிய நேரு மார்க்கெட் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நேரு மார்க்கெட் திறப்பு விழா கண்டும், சுமார் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது. வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த மாதம் புதிய நேரு மார்க்கெட் திறக்கப்பட்டு, 117 கடைகளில் 78 கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்படாத கடைகள் சிலவற்றை அக்கடைகளின் அருகில் உள்ள வியாபாரிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக, நகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று நேரு மார்கெட்டுக்கு சென்று, வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    • கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
    • குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு கடையை எடுத்து நடத்தி வருபவா் கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.நிலுவைத் தொகையான ரூ.37 ஆயிரத்தை கட்ட கால அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா் கட்டவில்லையாம். இதையடுத்து, காங்கயம் நகராட்சி ஊழியா்கள் கடையை பூட்டி 'சீல்' வைத்தனா்.

    இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.

    • பண்பொழி பகுதியில் முருகன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தது.
    • உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி பகுதியில் முருகன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ப்பட்டு அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது.
    • இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது. கடையில் ஆய்வு செய்ததில் கெட்டுப்போன இறைச்சி குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

    இது பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் கூறுகையில், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த உணவு பொருள் கடையாக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக 8 முறை கருமுட்டை பெறப்பட்டது.
    • பின்னர் இந்த கருமுட்டைகள் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    சேலம்:

    ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக 8 முறை கருமுட்டை பெறப்பட்டது. பின்னர் இந்த கருமுட்டைகள் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் யவை? யவை? என அதிகாரிகள் விசாரணை நடத்தி கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அந்த மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்படும் என தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

    அதன்படி சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிருந்தாவன் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின்ஸ்கேன் சென்டர் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி 30 கால அவகாசம் 30 நாட்கள் சுகாதார துறை வழங்கியது.

    இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்ததும் சேலம் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் மற்றும் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு நோயாளிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.

    ×