search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைப்பு"

    • காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    • ட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதையடுத்து ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். ஆற்றூர் நகர தலைவர் ஜாண் வெர்ஜின் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜாண் இக்னோஷிஸ், மாவட்ட செயலாளர்கள் ஆற்றூர் குமார், தங்க நாடார், வட்டார செயலாளர்கள் வக்கீல் ராஜேஸ், ராஜாதாஸ், செறுகோல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொன்மனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேரூராட்சி விவசாய பிரிவு தலைவர் வினு, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஜாண் போஸ்கோ, ஓ.பி.சி. பிரிவு தலைவர் அபினேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனிஷ் ராஜ், வார்டு தலைவர் சுஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்நகர் காமராஜர் பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் திங்கள் நகர் பேரூர் துணை தலைவர் ரீத்தம்மாள், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜூமோன், தக்கலை ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, ஜேக்கப் அருள்பால், தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நகர தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின் தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப் புக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயல் தலைவர் முனாப், மாநில செயற்குழு உறுப்பி னர் யூசுப்கான், கவுன்சிலர் ரமேஷ், மாநில மீனவர் காங்.துணைத்தலைவர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி வீரேஷ் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு. ஏ. என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும்.
    • மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

        சேலம்:

    தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்பட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பவதாவது-

    பள்ளிக்கல்வித்துறையில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்கு பின்னர் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தவிர பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவல கங்கள், பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியாளர் விபரங்களையும் தனி அறிக்கையாக அனுப்ப வேண்டும் இநத பணி களின்போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவரின் விபர மும் விடுபடாதவாறு அறிக்கையை விரைவாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது.
    • இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது. கடையில் ஆய்வு செய்ததில் கெட்டுப்போன இறைச்சி குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

    இது பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் கூறுகையில், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த உணவு பொருள் கடையாக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சேலம், நாமக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 8 வயது வரையிலான குழந்தைகள் எண்ணையும், எழுத்தையும் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு மாவட்ட வாரியாக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 1,2,3 -ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து தனித்தனியே பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ×