search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scholarship"

    • மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார் பில் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-ம் ஆண்டு தொ டக்க விழாவில் 15 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலா ளர் பாஞ்சுபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் காஜா முஹைதீன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தொடங்கி வைத்து பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முஹம்மது முஸ்த பா, விமன் இந்தியா மூவ் மெண்ட் மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ் நரிப்பையூர் ஜமாத் தலைவர் முகம்மது ஆசாத், செயலாளர் அப்துல் ஹமீது, சாயல்குடி வர்த்த சங்க தலைவர் அபுபக்கர், செயலாளர் ராஜா முஹமது அ.தி.மு.க. பிரதிநிதி செய்யது காதர் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், பனைத் தொழிலாளர் நலச் சங்க மாநில தலைவர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் 15 மாணவர் களுக்கு உயர்கல்வி படிப்ப தற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முடி வில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.

    • வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    1.4.2018 முதல் 30.6.2018 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள (மாற்றுத்தி றனாளி ஓராண்டு முடிவு பெற்றுள்ள) பட்டப்படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் பள்ளி இறுதித்தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாகப் பள்ளியில் 9-வது வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் 10-வது பள்ளியிறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புக் காலாண்டிற்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்களை வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தினை www.tnvelaivaaippu.gov.in, https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலைநாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

    வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார்.
    • பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகை வழங்கினார்.

    திருப்பூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் மனைவி வனஜாதேவி. இவர்களுடைய மகள் பவானி. இவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவானி கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தார்.

    இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார். இதை அறிந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் மாணவியிடம் கட்சி நிர்வாகிகள் மூலம் செல்போன் மூலமாக பேசி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகையும் வழங்கினார். இதை ஓ.பன்னீர்செல்வம் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட துணை செயலாளரும், கனிஷ்கா பில்டர்ஸ் அண்டு புரொமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருமான கனிஷ்கா சிவக்குமார் மாணவி பவானியிடம் வழங்கினார்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மோ.ராஜசேகர் என்கிற திலீப் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். கல்வி உதவித்தொகையை பெற்றுக் கொண்ட பவானி, தமிழ்நாடு முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும் வழங்கி சமூக சேவையாற்றி வரும் ஜெயபிரதீப், தந்தையை இழந்த என்னை அழைத்து ஊக்கப்படுத்தி, உதவி செய்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது என்றார்.

    • அரவக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கபட்டது
    • பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    கரூர்,

    அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரை, சதீஷ்குமார் ஆகியோர் உதவித்தொகை வழங்கினர். பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் இரு மாணவர்களுக்கும் உதவித்தொகை பெற பரிந்துரைத்தார். அதனடிப்படையில் இவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம், ரூ.1.50 லட்சம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாகுல்அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • மாணவர்கள் உதவித்தொகை பெற மீண்டும் இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் கல்வி பயின்ற ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்வத ஆதி திராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான https:/tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வருகிற 30ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும், காலநீட்டிப்பு வழங்க இயலாத சூழ்நிலையுள்ளதால் குறித்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.

    சேலம்:

    அறிவியல் மற்றும் தொழில் துறையில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒருங்கி ணைந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவ னங்களுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

    அதாவது, வைஷ்விக் பாரதீய வைகியானிக் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டம் (விஏஐபிஹெச்ஏவி) இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யால் அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்த உதவித்தொகை, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறந்த அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப த்துறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட உள்ளது.

    இதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.

    70-க்கும் மேற்பட்ட நாடு களில் வசிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

    அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமூகப் பொருளா தார மாற்றத்திற்கான நமது முயற்சியில் அறிவியல் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

    இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.

    • 10 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச நோட்டுப்புத்தகம் வழங்கினார்.
    • கோவை மண்டல பொறுப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் வக்கீல் கோபிநாத் 10 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச நோட்டுப்புத்தகம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, மாநகர செயலாளர் செல்வக்குமார், மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார், கோவை மண்டல பொறுப்பாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்
    • கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2,720 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 80 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 12 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 2 ஹெக்டேர், தென்னை 12,584 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும்,0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு,இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆகஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்) சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உதவித்தொகை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

    ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள்

    மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • 18 கிராமங்களுக்கா வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்க த்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பாள், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கான தீர்வாயத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

    இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.
    • வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதிகோரியும் என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெகடர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இதில் பட்டா தொடர்பான 53 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 27 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 17 மனுக்களும், போலீஸ் துறை தொடர்பாக 41 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 15 மனுக்களும் மற்றும் இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனி த்துணை கலெக்டர் கற்பகம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன், மாவட்ட வழங்கல் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×