search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை- கலெக்டர் வழங்கினார்
    X

    பயனாளி ஒருவருக்கு மின்னணு குடும்ப அட்டையை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை- கலெக்டர் வழங்கினார்

    • அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • 18 கிராமங்களுக்கா வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்க த்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பாள், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கான தீர்வாயத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

    இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×