search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saplings"

    • குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறை மியாவாக்கி என்று அழைக்கப்படுகிறது.
    • வெவ்வேறு வகையான மரங்கள் நடும் போது அவை குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 500 மரக்கன்றுகள் ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் நடப்பட்டது. இதனை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைத்தார்.

    இந்த மியாவாக்கி முறை இடைவெளி இல்லா அடர் காடு என்ற தத்துவத்தின்படி, வெவ்வேறு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் வைப்பது இதன் அடிப்படை நோக்கமாகும். இந்த முறை குறிப்பிட்ட இடத்தில் ஆழமான குழிகள் தோண்டி அதில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறை மியாவாக்கி என்று அழைக்கின்றனர். இதன் மூலமாக அந்த நிலத்தின் வெப்ப நிலை குறையவும், காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், பறவைகள் வாழ்விடமாகவும், பல்லுயிர் சூழல் உருவாக உதவுகிறது. மேலும் இதன் சிறப்பம்சம் வெவ்வேறு வகையான மரங்கள் நடும் போது மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போட்டி போட்டு குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தருகிறது.

    இதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட காவல் அலுவலக தோட்டத்தில் மகாகனி, ஈட்டி, வேங்கை, புங்கை, வேம்பு, செம்மரம், இலுப்பை, நீர்மருது வகையான 500 மரக்கன்றுகளை ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் நட்டுவைக்கும் முறையை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

    • மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.

    விளாத்திகுளம்:

    மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முயற்சியால் விளாத்திகுளம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றும் முயற்சியாக விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது சூரங்குடி- எட்டையாபுரம் வரையிலான சுமார் 35 கிலோமீட்டர் சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான சாலை ஓரங்களில் உள்ள சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.

    இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ராகவன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் யோகம் பொது சுகாதார மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 1,610 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்தமிழ்ச்செல்விபோஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, தொண்டு நிறுவன இயக்குநர் தமயந்தி முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.

    இதில் வேம்பு உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த யோகேஷ்மணிராஜ், ஷியாம் பரணிதரன், வனச்சரக அதிகாரி பால்பாண்டியன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
    • ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினமான 22-4-22 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்றை நட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.

    இந்த நிலையில் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது. அதன்படி இன்று தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 1 லட்சமாவது மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது இந்த திட்டம் வெற்றிகரமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடைந்ததை முன்னிட்டு அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் இன்று 1 லட்சமாவது மரக்கன்று நடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை அதிகப்படுத்துவது , பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது மக்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதனால் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்று படுகைகள், மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இதர அரசுத்துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தில் நடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும் , அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

    திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசைவனம், அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம், சமுத்திரம் ஏரியில் பறவைகள் வனம், மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆழி வனம் ஆகவே சிறப்புக்குரியதாகும்.

    மரக்கன்றுகள் நடுவதோடு அதனை முறையாக பராமரிப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இயற்கையை பராமரித்து மேம்படுத்த வேண்டும். 99 சதவீத மரங்கள் நல்ல உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், டாக்டர் சிங்காரவேல், ரெட் கிராஸ் டாக்டர் வரதராஜன், பொறியாளர் முத்துக்குமார், மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், தாசில்தார் சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்குள் மகோகனி, செம்மரம், வேங்கை, தேக்கு , ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.

    மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தேவைப்படும் மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி, வேளாண்மை உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி பொறியாளர் தமிம்அன்சாரி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்தியஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி, பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளை செயலாளர் பரமசிவம், கருப்பசாமி, முனியசாமி , வார்டு செயலாளர் மாரிராஜ், வார்டு கவுன்சிலர் செல்வகுமார் சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடங்கப்பட்டு 100-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகத்தின் அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுகாதாரப் பணிகள் (பொறுப்பு) துணை இயக்குனர் வித்யா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பனை விதைகள் உள்பட 100 மரக்கன்றுகளை சுகாதார நிலைய வளாகத்தில் நட்டு, முறையாக பராமரித்து வளர்ப்பதென உறுதிமொழி ஏற்றனர். இறுதியில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.

    • 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாய நிலங்களில் வரப்புகளில், பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாய நிலங்களில் வரப்புகளில் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    சுல்தான்பேட்டை வட்டாரத்திற்கு 1,300 பெரு நெல்லி, 15,700 மகாகனி, 4,500 குமிழம், 5,300 மலை வேம்பு என மொத்தம் 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் இம்மரக்கன்றுகளை பெற சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து பரிந்துரை படிவம் பெற்று வனத்துறை நாற்றாங்காலில் நேரடியாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் விஜய கல்பனா தெரிவித்துள்ளார்.

    • விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.
    • மரக்கன்றுகள் நட்டப்பட்டு அதற்கு பாதுகாப்புவேலிகள் அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி உட்பட்ட கோட்டவிளை சுடலைமாடன்சாமி கோவில், 16, 17- வது வார்டு ஆகிய பகுதிகளில் மரம் வளர்போம் மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார். சுமார் 30 மரக்கன்றுகள் நட்டப்பட்டு அதற்கு பாதுகாப்புவேலிகள் அமைக்கப்பட்டது. இதில் உடன்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் முகம்மதுஆபித், சபானா தமீம், அன்புராணி, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
    • நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ஆ.மருதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 145 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், செல்வி மணிமாறன் தலைமை தாங்கினர். தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யாமணிகண்டன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, தொழிலதிபர் மாரி துரை, அரசு ஒப்பந்ததாரர் மணிமாறன், ராமகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.
    • பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.

    மார்க்கெட் சாலை

    இதில் குறிப்பன்குளம், குருவன்கோட்டை, நெட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக ஆலங்குளம் தையல்நாயகி மார்க்கெட் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலையில் காய்கறி மார்க்கெட் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திவரும் மார்க்கெட் சாலையானது தொடர்மழையால் மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மரக்கன்று நட்டினர்

    அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன. மேலும் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் இருசக்கர வாகனங்களில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். சாலையின் இருபுறமும் இயங்கி வந்த சிறு வியாபாரிகளின் கடைகளுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் அந்த சாலையில் திடீரென மரக்கன்றுகளை நட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    உடனடியாக நெடுஞ்சாலைத்துறை இதனை கவனத்தில் எடுத்து சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்‘ திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.
    • ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உழவர் நலத்துறை மூலம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்ப டுத்த, வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலா கவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இந்த ஆண்டில் 22,500 செம்மரம், மகோகனி, சந்தனம், சிசு மரம் ஆகிய மரங்கள் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    ×