என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.
விளாத்திகுளம் அருகே மரக்கன்றுகள் வழங்கும் விழா - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி, வேளாண்மை உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி பொறியாளர் தமிம்அன்சாரி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்தியஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி, பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளை செயலாளர் பரமசிவம், கருப்பசாமி, முனியசாமி , வார்டு செயலாளர் மாரிராஜ், வார்டு கவுன்சிலர் செல்வகுமார் சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






