search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy arrested"

    செங்குன்றம் அருகே கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வழிப்பறியில் ஈடுபட்டார்.

    ஜோதிநகரில் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ரவுடி ராகுல் வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.

    இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரவுடி ராகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடி ராகுலை கைது செய்தனர்.

    கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி திடீரென கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவரை நேற்று ரோட்டில் சென்ற போது ஒரு வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்து விட்டு தப்பி சென்றார். 

    இது குறித்து லாரன்ஸ் பொன்மலை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பணத்தை பறித்து விட்டு தப்பித்தவர் பிரபல ரவுடி நார்த் டி பாஸ்கர் எனத் தெரியவந்தது. 

    பாஸ்கரை பொன்மலை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். பாஸ்கர் மீது தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    திருச்சியில் நேற்று முன்தினம் ரவுடி சந்துரு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் தேடி பிடித்து வருகிறார்கள். ஜாமீனில் விடுதலையாகியுள்ள ரவுடிகளையும் கண்காணித்து வருகிறார்கள். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் தினசரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
    கடையம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி என்ற கவுளிகுமார் (வயது 35). இவருக்கு மேலகுத்தப்பாஞ்சான் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் மனைவியின் ஊரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு மற்றும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.  

    இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார்  பரிந்துரையில், மாவட்ட கலெக்டர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.
    தூத்துக்குடி வாலிபர் கொலையில் தொடர்புடைய ரவுடியை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணி யார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    பாலமுருகன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்த போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவர் குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கும் சங்கரின் மகன் பாரதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதி, சங்கர் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை வாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை போலீசார் இன்று கைது செய்தனர். சங்கர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக தென்பாகம், தெர்மல்நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருச்சியில் 34 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் அஜிபா. இவரது மகன் சாதிக்பாட்சா. இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலக்கரை எடத்தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற மர்ம நபர், சாதிக்பாட்ஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

    இது குறித்து சாதிக்பாட்சா காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்தி விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது பாலக்கரை பிள்ளை மாநகரை சேர்ந்த அந்துவன் மகன் வைத்தன் சுதாகர் (வயது40) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை, அடிதடி என திருச்சி மாநகர காவல் நிலையங்களில் மொத்தம் 34 வழக்குகள் உள்ளது. 

    இந்தநிலையில் வைத்தன் சுதாகரின்  தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய மாநகர  கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து  போலீசார் தேடி வந்தனர்.  

    இந்த நிலையில் பிச்சை நகர் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சுதாகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம்  இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருமங்கலத்தில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மானாமதுரை ரவுடி கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அடிக்கடி நகைபறிப்பு, வழிப்பறி போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. பட்டப்பகலிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    மதுரை பைக்காரா முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (வயது 32). இவர் நேற்று திருமங்கலம் மறவங்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மானாமதுரை ஏ.வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு என்ற குட்டை கமல் (27) என்பவர் வழிமறித்தார். அவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த பிரபுவை கைது செய்தனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி அருகே வாகன சோதனையின்போது டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளுடன் ரவுடியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் நேற்று இரவு சீர்காழியை அடுத்த எருக்கூரில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சிதம்பரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சீர்காழியை நோக்கி வந்தனர். சந்தேகத்தில் பேரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் வெடிகுண்டுகளை வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. 2 டிபன் பாக்ஸ்களில் அந்த வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எருக்கூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடத்தில் அந்த டிபன் பாக்ஸ்களை வைத்துள்ளனர். அதனை சுற்றி மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்துள்ளனர். டிபன் பாக்ஸ்சில் இருப்பது நாட்டு வெடிகுண்டா? சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஆய்வு செய்ய திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கலைவாணன் (வயது30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் எருக்கூரைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கொலை திட்டத்துடன் வந்தார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் எருக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ரவுடி வசூர் ராஜாவை பொய் வழக்கில் போலீசார் கைது செய்ததாக அவரது தாய், கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், கலெக்டர் ராமன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

    தமிழக விவசாயிகள் சங்கம் அளித்த மனுவில்:- வேலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் வேர்க்கடலை பட்டு போய் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    மற்றொரு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில்:- 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதத்திற்கு 8 நாள் என வரைமுறை வகுத்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.

    வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜாவின் தாய் கலைச்செல்வி (வயது 65), கலெக்டர் ராமனை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் ஆறுமுகம் ராணுவத்தில் பணி புரிந்து இறந்துவிட்டார். எனக்கு புற்று நோய் இருப்பதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது ஒரே மகன் ராஜா என்கிற வசூர் ராஜா மீது மீண்டும் மீண்டும் பல பொய் வழக்குகளை போட்டு பொதுமக்களிடம் ரவுடியாக சித்தரித்து விட்டனர்.

    ராஜா என்பவரை வசூர்ராஜா என்று பட்டம் கொடுத்து போலீசார் உருவாக்கிவிட்டனர். நான் சென்னையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறேன். வயதான காலத்தில் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு என் மகன் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தார்.

    அப்போது முதல் எந்த வம்புக்கும்போகாமல் வீட்டில் இருந்து என்னை கவனித்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி காலை 8.30 மணிக்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    நானும் பின்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். போலீசாரிடம் கேட்டதற்கு, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக வசூர் ராஜாவை கைது செய்துள்ளதாக கூறினர்.

    என் மகன் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர். வசூர் ராஜா திருந்தி என்னுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். பெண் பார்த்துவந்தேன். இந்த நிலையில், போலீசார் கைது செய்ததால் மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகன் வசூர்ராஜாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    போடி பஸ் நிலையத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி சிலமலை அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவர் போடியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கான பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்லையாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கூறினார்.

    ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர் செல்லையாவை கத்தியால் கையில் குத்தினார். இதில் வேதனையால் செல்லையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

    உடனே அந்த நபர் தப்பி ஓட முயன்றார். உ‌ஷரான பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வடிவேல் என்கிற தீக்கொளுத்தி (வயது29), பிரபல ரவுடி என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    சென்னை எம்ஜிஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவுடி உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரைச் சேர்ந்த தினேஷ், கணேஷ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தினேஷ் மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்கு மற்றும் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும் அவர் பிரபல ரவுடியான சின்ன சிவாவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    கியூபிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை கத்தியால் குத்திய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி:

    ஈரோடு மாவட்ட கியூபிரிவு இன்ஸ்பெக்டர் செல்லத்துரை(45), கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு மோகனசுந்தரம்(43) ஆகியோரை பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் வைத்து 3 ரவுடிகள் கத்தியால் குத்தினர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக் காமனன், ரத்தின குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து போலீசாரை கத்தியால் குத்திய போளுவாம்பட்டியை சேர்ந்த விஜய், வெங்கடேசா காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(25), மரப்பேட்டையை சேர்ந்த ‘நாத்(24) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்தவர்களை பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. நாத் கோவை செல்வபுரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.

    சுசீந்திரம் அருகே நடந்து சென்ற தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டி குத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் வழுக்கம்பாறை பல்பநாதன்புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 47). தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக வழுக்கம் பாறை சந்திப்பில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந் தார். அப்போது அங்கு  வந்த பறக்கை செட்டித்தெருவைச் சேர்ந்த மணிகண்டபிரபு (31) அவரை தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார். செல்போனை தன்னிடம் தருமாறு வேலு கூறினார். ஆனால் மண்கண்டன் கொடுக்க மறுத்து அதை உடைத்தெறிந்தார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தான் வைத்திருந்த கத்தியால் வேலுவை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் விலகிச் சென்றார். இதனால் காயம் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டார்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். மணிகண்டபிரபு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து வேலு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக் டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டபிரபுவை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மணிகண்டபிரபு பிரபல ரவுடி என்பதும், அவர் மீது போலீஸ் நிலைத்தில் அடி, தடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    ×