search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Python"

    • தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம்.
    • ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

    இந்தோனேசியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 52 வயதான ஜஹ்ரா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்கு தேடி சென்றனர். விடிய விடிய தேடியும் ஜஹ்ரா கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மறுநாள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே 16 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. அந்த பாம்பின் வயிறு மிகவும் வீங்கிய நிலையில் காணப்பட்டது. இதைப்பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு கொன்று விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை அடித்துக்கொன்று பாம்பின் வயிற்றை கிழித்தனர். அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பஸ், நேற்று விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
    • ஆட்டு குட்டி ஒன்றை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு பஸ்சின் என்ஜின் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பஸ், நேற்று விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது பஸ்சின் அருகே சென்ற கிராம மக்கள் பஸ்சுக்குள் ஒரு மலைப்பாம்பு கிடப்பதை கண்டனர். உடனே அவர்கள் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பள்ளி நிர்வாகிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆட்டு குட்டி ஒன்றை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு பஸ்சின் என்ஜின் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டனர்.

    வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த காட்சிகளை அந்த பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.

    இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.

    • அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது.
    • 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.


    நீலகிரி

    கூடலூர் வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி தேயிலை தோட்டங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து தேயிலை தோட்ட கழக அலுவலர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நாடுகாணி வனச்சரகர் வீரமணி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தொழிற்சாலை அருகே தேயிலை செடிகளுக்கு அடியில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அடர்ந்த வனத்தில் கொண்டு மலைப் பாம்பு விடப்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.


    • மாடுகளுக்காக வைத்திருந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு அசைவதை கண்ட தனசேகர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவலளித்தார்.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட 2 வயது மலைப்பாம்பை பிடித்தனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் உப்புலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தை சேர்ந்த தனசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பூஞ்சோலையம்மன் கோயிலருகே உள்ளது.

    இந்நிலையில் அங்கு மாடுகளுக்காக வைத்திருந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு அசைவதை கண்ட தனசேகர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவலளித்தார்.

    திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண்குமார் உத்தரவின் பேரில் துறையூர் வனசரகர் பொன்னுசாமி தலைமையில் இந்திய விலங்குகள் நல வாரிய மாநில அலுவலர் சோபனபுரம் இளங்கோவன், துறையூர் வனத்துறை வனவர் சியாம் சுந்தர் வனக்காப்பாளர் குமரவேல், வனக்காவலர் பாக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட 2 வயது மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட மலைப்பாம்பு பச்சைமலை மூன்றாது கொண்டை ஊசி வளைவில் உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.

    • பாம்பு ரயில்வே டிராக்கை தாண்டி வருவதை பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை செங்கோட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ரெயில் நிலையத்தின் வளாகத்திற்குள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் மலைப்பாம்பு சுற்றிதிரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாம்பு ரயில்வே டிராக்கை தாண்டி வருவதை பார்த்த பணியாளர்கள் செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலையஅலுவலர் சிவசங்கரன் தலைமையில் சிறப்பு அலுவலர் மாரியப்பன், வீரர்கள் செந்தில்குமார், வினோத்குமார், இசக்கி துரை ஆகியோர் விரைந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பான பையில் போட்டனர்.

    பின்னர் மலைப்பாம்பை செங்கோட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப் பாம்பை காட்டுப்பகுதியில்கொண்டு விட்டனர்.

    குற்றாலம் மெயின் அருவியில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர்.

    விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வருகையும் இன்று அதிகளவில் இருந்தது. இந்நிலையில் மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஊர்ந்தபடி சென்றது.

    இதனை பார்த்த பெண்கள் அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடினர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு புதருக்குள் சென்றுவிட்டது. அந்த பாம்பு எங்கு சென்றது என்று தெரியாததால் பெண்கள் செல்லும் பகுதியில் அருவியில் குளிக்க யாரையும் அனுமதிக்கவில்லை.

    அருவி அருகே உள்ள புதருக்குள் வனத்துறையினர் மலைப்பாம்பை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், மாதவன், சிவக்குமார் உள்ளிட்டோர் வந்து அரைமணி நேர தேடுதலுக்கு பிறகு அருவி தண்ணீர் பாய்ந்தோடும் புதருக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர்.

    பின்பு அந்த மலைப்பாம்பு வனத்துறையினர் உதவியுடன் குற்றாலம் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் காட்டுயானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேலும் மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டு விரியன் என பல வகை பாம்புகளும் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பாம்புகள் அடிக்கடி தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    தொடர்ந்து கீழ்நாடுகாணியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாம்பை பத்திரமாக விட்டனர்.

    கிருஷ்ணகிரியில் தோட்டத்தில் புகுந்த 11 அடி மலைப்பாம்பை வனத்துறையில் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பட்டா குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது50). இவரது தோட்டத்தில் திடீரென சத்தம் கேட்டது. அப்போது அந்த பகுதியில் அவர் சென்று பார்த்த போது 11 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியை வைத்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் செப்டிபள்ளி வன பகுதியில் கொண்டு விட்டனர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்புடன் கிராம மக்கள் பல்வேறு விதமாக செல்பி எடுத்துக்கொண்டதில் மலைப்பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது.
    கொல்கத்தா:

    இன்றையை ஸ்மார்ட்போன் உலகில் செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்தாலும்,   அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே வருகிறது.

    செல்பி மோகத்தால் மனிதர்கள் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது அதே செல்பி மோகம் உயிரினங்களையும் மரணிக்க செய்கிறது. மேற்கு வங்க மாநிலம் பாபுஜியோர் கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் செல்லும் ஆற்றில் 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். பின்னர் அதனுடன் பல்வேறு விதமாக செல்பியை எடுத்துள்ளனர்.

    செல்பி எடுப்பதற்காக பாம்பினை மிக மோசமாக கையாண்டதால் மலைப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிலர் பாம்பின் கழுத்துப்பகுதியை பிடித்த வண்ணமும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மலைப்பாம்பை தோளில் போட்டு செல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியை பாம்பு தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மலைப்பாம்பை பிடித்தனர். அதில் ஒரு அதிகாரி பாம்பை தனது தோளில் எடுத்து போட்டுக்கொண்டு நடந்தார்.

    அப்போது அவருடன் செல்பி எடுக்க கிராமத்தினர் முயன்றனர். திடீரென பாம்பு அவர் கழுத்தை நெறிக்க தொடங்கியது. இதனை கண்ட பலர் அங்கிருந்து ஓடினர். பின்னர் மற்ற வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    அந்த வனத்துறை அதிகாரி பாம்புடன் மாட்டிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×