search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puja"

    • செல்லியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலின் 6-ம் ஆண்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக செல்லிஅம்மனுக்கு பால், பன்னீர் , சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    மலர்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர் களுக்கும், அ.வாழப்பாடி கரக்காரர் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்

    பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக உற்சவ திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    இதனை முன்னிட்டு கோவிலூர் கோவிலில் இருந்து சுவாமி எடுத்து வரும் நிகழ்ச்சியும், விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    இந்நிலையில், நேற்று அம்மனுக்கு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை வெள்ளக்குளம் கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,

    வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னார், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், மாவிளக்கு போடுதல், முடி இறக்குதல் ஆகியவை நடந்தது.

    இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    • உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.
    • உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை வராச்சாரியார்கள் நடத்தினார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி, புனித நீர் எடுத்து வந்து கலசத்தில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஹோம பூஜை நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை சிவராச்சாரியார்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணியர் சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு 31-ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    அந்தியூர் பிராமணர்கள் சங்கம் சார்பில் ஓம் சக்தி என்ற 108 பிரணவ தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினி தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    • ராஜபாளையம் நகர் பகுதியில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர் 9,10,11 ஆகிய வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராஜபாளையம் நகர, கிராமப்பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 10 நியாய விலைக்கடைகள் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் சம்மந்தபுரம் பகுதி நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
    • வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு சஷ்டியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், பவித்திரம், பாலமலை, வெண்ணெய்மலை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு, சஷ்டியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் பாலமலை பாலசுப்பி ரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபி ஷேகம் நடந்தது.

    • சிறப்பு ேஹாமம் பாலாலையம் நடத்தப்பட்டது
    • மஞ்சள் கலந்த புனித நீர் சிவாச்சார்யார்களால் தெளிக்கப்பட்ட பின்னர் பூமி பூஜை நடைபெற்றது

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமம் கலிபுல்லா நகர் காலனியில் உள்ள செல்வகணபதி ஆலயம் கட்டுவதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு யாகங்கள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதன் பின்னர் பூமி பூஜை தொடங்கியது. இதற்காக பெண்கள் மஞ்சள் நீர் எடுத்து வந்தனர். சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மஞ்சள் நீரை தெளித்து பூமி பூஜையை நடத்தினர்.இந்த தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி, ஒன்றிய குழு கவுன்சிலர் பிரகதா ரத்தினவேல், திமுக மாவட்ட பொதுகுழு உறுப்பினர் தலைவர் நாராயணன், கல்லாலங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளியில் நடைபெற்றது
    • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    பெரம்பலூர், 

    தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளிகளின் பாத பூஜை விழா நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த பாத பூஜை விழாவில் நடப்பு கல்விஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களும் அவர்களது பெற்றோர்க ளும் பங்கு பெற்றனர். மேல்நிலைப்பள்ளியின் முதல்வர்டாக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார் . அதனைப் பின்தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், மற்றும் செயலர், முதல்வர்களும் மாணவ பிரதிநிதிகள், பெற்றோர்கள் என சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றினர்.தமிழ்வழி பள்ளியின் முதல்வர் கோவிந்தசாமி பாதபூiஐ இனிதே நடைபெற வழிநடத்தினார்.மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களை அமர வைத்து அவர்களுக்கு பாதபூஜை செய்து அவர்க ளிடமிருந்து ஆசிர்வாதத்தை பெற்று மகிழ்ந்தனர்.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் அவர் மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டினை வழங்கினார்.வேந்தர் சீனிவாசன் பேசும்போது, இந்த பாதபூஜை மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். பொது த்தேர்வுகளை தயக்கம் இன்றி சந்திக்க, வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோர்களின் அன்பும் ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும் குருவை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவும் இந்த பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர் பேசினார். தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளிகளின் முதன்மை முதல்வர் சாம்சன் மாணவர்களை வாழ்த்தி, நீட், ஜே.இ.இ போன்ற போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார் . அவ்வப்போது பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்க மளித்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.ஓவ்வொரு மாணவரும் தாய் தந்தையரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர் . ஆசிரியை மேரி சுவாகின் பீகா இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் .துணை முதல்வர் திருமதி பிரியதர்சினி நன்றியுரை வழங்கினார். 

    • வருடாபிஷேக விழா
    • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி வரசக்தி விநாயகர் செம்முனீஸ்வரர், பெரிய கருப்பர், பத்ரகாளியம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு 13-ம் ஆண்டு வருடபிஷேக விழாவும், 12-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. முதலில் விநாயகர் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற் முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மேலக்கோட்டை கிராமத்தார் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
    • இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது.

    காரைக்குடி

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

    அதன்படிநேற்று காரைக்குடி மீனாட்சி புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு 125 கிராம் பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச்சிமிழ், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விளக்குத்திரி, தாலிக்கயிறு, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம், பூக்கள், பூச்சரம், 500 கிராம் பச்சரிசி, 100 மில்லி தீப எண்ணெய், பூஜை பை, சர்க்கரை பொங்கல், பிரசாதம், சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழஙகப்பட்டன.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் வினோத்கமல், கவுன்சிலர்கள் கண்ணன், பசும்பொன் மனோகரன், மைக்கேல், கலா காசிநாதன், சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவர்கள் நாராயணி, கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×