திருவிளக்கு வழிபாடு பூஜை

பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
திருவிளக்கு வழிபாடு பூஜை
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு 31-ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது.

அந்தியூர் பிராமணர்கள் சங்கம் சார்பில் ஓம் சக்தி என்ற 108 பிரணவ தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினி தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com