என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு அருள்பாலித்த வாழப்பாடி சாய்பாபா.
வாழப்பாடி சாய்பாபா கோவிலில்சகோதரத்துவ நட்புறவு வழிபாடு
- ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
- இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி:
வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
மலர்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர் களுக்கும், அ.வாழப்பாடி கரக்காரர் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்
பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.






