search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Homa"

    • உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.
    • உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை வராச்சாரியார்கள் நடத்தினார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி, புனித நீர் எடுத்து வந்து கலசத்தில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஹோம பூஜை நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை சிவராச்சாரியார்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணியர் சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×