என் மலர்
நீங்கள் தேடியது "ThiruVilakku"
- தேவகோட்டை புவனேசுவரி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.
- வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.
தேவகோட்டை
தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள புவனேசுவரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வழிபாடு செய்தனர். அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.
- காளையார்கோவில் அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிரமம் கிராமத்தில் பழமையான கொங்கேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இங்குள்ள ஏழுமுக காளியம்மன் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமி அன்று உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த ஆண்டு நாடு தனது 75-வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாட உள்ள நிலையில் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நல்லுறவை பேணி வாழவும் உலக நண்மை வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
- விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- தொண்டி அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
- இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக அமைதிக்காகவும், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நிறுவன தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது.
சாராதா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுந்தரி விளக்கு பூஜையை தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவிகள் மந்திரங்கள் ஓதினர்.பா.ஜ.க.மாவட்ட தலைவர் கதிரவன், மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டி, இந்து ஜனநாயகப் பேரவை நிறுவன தலைவர் அண்ணாத்துரை, மணிகண்ட குருக்கள், முன்னிலை வகித்தனர்.
பாகம்பிரியாள் அம்மன் கோவில் முன்பு நடந்த இந்த திருவிளக்கு வழிபாட்டில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
- கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
பாரதி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்யப்பட்டு, பாதபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
பெண்கள் பக்தி பாடல்கள் பாடியவாறும், கும்மியடித்து ஆடியவாறும் கன்னிமார் சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.