வரலட்சுமி நோன்பு விரதம் சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம்

ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறுமிகள் கன்னிமார் அலங்காரத்தில் வலம் வந்த காட்சி.
சிறுமிகள் கன்னிமார் அலங்காரத்தில் வலம் வந்த காட்சி.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.

பாரதி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்யப்பட்டு, பாதபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

பெண்கள் பக்தி பாடல்கள் பாடியவாறும், கும்மியடித்து ஆடியவாறும் கன்னிமார் சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com